முந்தய பக்கம்

ஏற்றுக்கூலியை உயர்த்தி தர சிஐடியு வலியுறுத்தல்

11 Jun 2026, 11:14 pm
ஏற்றுக்கூலியை உயர்த்தி தர சிஐடியு வலியுறுத்தல்
<p><strong>ஏற்றுக்கூலியை உயர்த்தி தர சிஐடியு வலியுறுத்தல்</strong></p><p>சேலம், ஜூன் 11- குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஏற்றுக் கூலியை உயர்த்தி தரவேண்டும் என தமிழ்நாடு சுமைப் பணி தொழிலாளர் சம்மேளன டாஸ்மார்க் குடோன் சேலம் மண்டல கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன டாஸ்மாக் குடோன் சேலம் மண்டல கூட்டம் வியாழனன்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் சங்க செயலாளர் வெற்றி தலைமையில் நடைபெற்றது. இதில், டாஸ்மாக் குடோன் தொழிலாளர்கள் பணியாற்றும் இடத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை முறையாக செய்து தர வேண்டும். குறைந்தபட்ச போனஸ் வழங்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு உடனடியாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். இக்கூட்டத்தில், சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் அருள்குமார், மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி, செயல் தலைவர் எஸ். குணசேகரன், மாநில துணைச் செயலாளர் ஏ.கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram