தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊதிய உயர்வு வழங்கிட கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் சிஐடியு வலியுறுத்தல்

17 Jun 2026, 12:27 am
ஊதிய உயர்வு வழங்கிட கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் சிஐடியு வலியுறுத்தல்
<p><strong>ஊதிய உயர்வு வழங்கிட கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் சிஐடியு வலியுறுத்தல்</strong></p><p>கோவை, ஜூன் 16- புதிதாக பொறுப்பேற்ற கோவை மாநகராட்சி ஆணையாளரை, சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கத்தினர் நேரில் சந்தித்து ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு வாழ்த்து தெரிவித்தும், தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்தும், சிஐடியு கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் நேரில் வலியுறுத்தினர். இதில், கோவை மாநகராட்சிக்குடபட்ட 100 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர், குடிநீர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் என 5000-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணிமூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியத்தை அமுல்படுத்தி, ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சிஐடியு தலைவர்களிடம் உறுதியளித்தார். இந்நிகழ்வில், சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், நிர்வாகிகள் ஆனந்தன், ஜோதிமணி, வளர்மதி, கவிதா, ராஜாக்கனி, மற்றும் சங்கப் பொறுப்பாளர் எம். ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.