தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

6 கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்! சிஐடியு வலியுறுத்தல்

7 Oct 2026, 10:25 pm
6 கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்! சிஐடியு வலியுறுத்தல்

6 கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்!

சிஐடியு வலியுறுத்தல்

விருதுநகர், அக்.7-தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் பிரச் சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 6 கூட்டுறவு நூற் பாலை (சிஐடியு) நிர்வாகிகள் கூட்டம், விருதுநகரில் தியாகி சந்துரு நினைவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு ஒருங்கிணைப்புக் குழு கன் வீனர் எஸ்.சக்திவேல் தலைமை தாங்கினார்.

மாநிலச் செயலாளர் இ.வடிவேல் குமார் துவக்கி வைத்து பேசினார். மாநில பொதுச் செயலாளர் எம்.அசோ கன் சிறப்புரையாற்றினார். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழ்நாட்டில் உள்ள 12 கூட்டுறவு நூற்பாலைகளில் 6 மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன. அவற்றிலும் 10 சதவிகிதத்துக்கும் குறைவானவர் களே நிரந்தரத் தொழிலாளர்களாக உள்ளனர். நீண்டகாலமாக தினக்கூலிஅடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை சட்டப்படி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட் டுள்ளது.

தொழிலாளர் நலத்துறை உத்தரவின்படி, 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். இதனை நூற் பாலை நிர்வாகங்கள் உடனடியாக அமல்படுத்த வேண்டும். தற்போது 3ஷிப்டுகள் இயங்குவது வரவேற்கத் தக்கது என்றாலும், தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க நிரந்தரவேலைவாய்ப்பும் நியாயமான ஊதியமும் வழங்க வேண்டும்.

தொழிலாளர்களை இடைத்தரகர் அல்லது ஒப்பந்த முறையில் நியமிப்பதைத் தவிர்த்து, நிர்வாகங்களே நேரடியாக நியமித்து ஊதியம் வழங்க வேண்டும். தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை, சட்டப்படியான கூடுதல் ஊதியம்உள்ளிட்ட உரிமைகள் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.நிரந்தரத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த 2025 டிச.31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். புதிய ஒப்பந்தத்தை 2026 ஜன.1 முதல் அமல்படுத்தி, ஒப்பந்தம் ஏற்படும் நாள் வரை நிலுவையில் உள்ள அரியர்ஸ் தொகையை வழங்க வேண்டும். மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகளையும் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இயங்கி வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளிலும் ஒரு வாரத்துக்குள் வாயில் கூட்டங்கள் நடத்துவது என் றும், பின்னர் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து தொடர்போராட்டங்களை நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.