தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்: சிஐடியு வலியுறுத்தல்
26 Sept 2026, 10:16 pm

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்: சிஐடியு வலியுறுத்தல்

சென்னை, செப். 26 –வாக்காளர் பட்டியல் சிறப்புத்தீவிரத் திருத்தப் பணியின் காரணமாகத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறிபோவதற்குக் காரணமான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கை, சட்ட விதிகளுக்கு முரணாகத் தேர்தல்ஆணையம் செயல்படுவதையும், கடந்த 10 மாதங்களில் மற்ற இரு தேர்தல் ஆணையர்கள்எழுப்பிய 14 ஆட்சேபனைகளைத் தலைமைத் தேர்தல் ஆணையர் நிராகரித்ததையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக சிஐடியு சுட்டிக்காட்டியுள்ளது. வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தை மையப்படுத்துதல் மற்றும் களப்பணியாளர்கள் தேர்தல் ஆணைய இணைய அமைப்பை அணுக முடியாத நிலை போன்ற காரணங்களால் விளிம்புநிலை மக்கள், ஏழைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

ஒன்றிய அரசு பரிந்துரைக்கும் அடையாள அட்டைகள் கட்டாயம் என்ற சூழலில், வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவது வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்களைச் சமூகப் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற்றிவிடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய சிறப்புத் திருத்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும், தகுதியிருந்தும் வாக்குரிமை பறிக்கப்பட்ட மக்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் சிஐடியு பொதுச் செயலாளர் எளமரம் கரீம் விடுத்துள்ளஅறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.