ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த சிஐடியு வலியுறுத்தல்
2 Oct 2026, 12:58 am

ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த சிஐடியு வலியுறுத்தல்

தருமபுரி, அக்.1-தூய்மைப் பணியில் ஈடுபடும் ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தூய்மைப் பணியில் ஈடுபடும் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மாதத்தின் முதல்வாரத்தில் சம்பளம் வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் பணிசெய்பவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களை பணியிடங்களில் கௌரவமாக நடத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அனைத்துப்பிரிவு ஒப்பந்த தொழிலாளர்ளையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர பணியில் தனியார்மய அரசாணைகளை 10,139,152 திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திசிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் வியாழனன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.

இந்த இயக்கத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் சி.நாகராசன், மாவட்டநிர்வாகிகள் பி.ஆறுமுகம், ஜெயராமன், போக்குவரத்து கழக நிர்வாகிகள் கோவிந்தன், குமரி மண்ணன், சவுந்தரராஜன், ஊரக உள்ளாட்சி தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சி.குட்டியப்பன், மாவட்டப் பொருளாளர் சத்யா ஆகியோர் பங்கேற்று பேசினர். அரூரில் துவங்கிய பிரச்சாரம் கடத்தூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் ஆகிய இடங்களில் நடைபெற்று, தருமபுரியில் நிறைவடைந்தது.