குடிநீர் வாரியத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்க! செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் சிஐடியு வலியுறுத்தல்
8 Jun 2026, 11:12 pm
<p><strong>குடிநீர் வாரியத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்க! செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் சிஐடியு வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, ஜூன் 8 - சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்த ரம் செய்ய வேண்டமென்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் ககன்தீப் சிங் பேடி யிடம் திங்களன்று (ஜூன் 8) தலைமைச் செயல கத்தில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) தலைவர் க.பீம் ராவ், பொதுச்செயலாளர் எம்.பழனி ஆகியோர் மனு அளித்து பேசினர். அந்த மனுவில், குடிநீர் வாரியத்தில் இணைக்கப்பட்ட 92 பேருக்கு பணியாணை வழங்க தொழிலாளர் உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்று, பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும். 20 ஆண்டுகள் வரை தினக்கூலி உள்ளிட்ட பல்வேறு முறைகளில் 2 ஆயிரத்து 850 பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில் 654 தொழிலாளர்களின் பணி நிரந்தர வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை திரும்ப பெற்று பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கான்ட்ராக்ட் அடிப்படை யில் பணியாற்றும் தொழி லாளர்களை வாரியமே நேரடியாக பணி வழங்க வேண்டும். பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்ய வேண்டும், 480 நாட்கள் பணி முடித்த வர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ககன் தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப் ழுட்ட குழுவின் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உரிய வழிகட்டுதலை வெளியிட வேண்டும், புழல் 300 எம்எல்டி சுத்திகரிப்பு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மீஞ்சூர், bம்மேலி 1 மற்றும் 2 அலகுகளையும் அரசே ஏற்று நடத்த பரிசீலிக்க வேண்டும். மிகைநேர பணி செய்யும் தொழிலாளர்களுக்கு இரு மடங்கு ஊதியம், இரவு நேர பணியாற்றும் தொழி லாளர்களுக்கு உணவுப்படி வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில்ப பணியாற்றுவோருக்கு மும்மடங்கு ஊதியம் தர வேண்டும், பணியின்போது அகால மரணமடையும் நிரந்தர மற்றும் ஒப்பந்தப் பணி யாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.</p>
