தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடுக

6 Jul 2026, 1:07 am
பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடுக

பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடுக

கோவை, ஜூலை 5- பெண் தொழிலாளர்களுக்கு 55 வயது முதல் ரூ.3,000 ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என சிஐடியு பொதுத்தொழிலாளர் சங் கம் வலியுறுத்தியுள்ளது.

சிஐடியு கோவை மாநகர பொதுத்தொழிலாளர் சங்கத்தின் 31 ஆவது ஆண்டு பேரவை ஞாயி றன்று கணபதியில் உள்ள சிஐடியு இன்ஜினியரிங் சங்க அலுவலகத் தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.வி.ரமணி தலைமை வகித்தார்.

மாவட்டக் குழு உறுப்பினர் சி.முத்துகி ருஷ்ணன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.

துணைத்தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்றார். சங்கப் பொறுப்பாளர் என்.ஜாகீர் துவக்கவு ரையாற்றினார்.

பொதுச் செயலா ளர் பி.நவநீதகிருஷ்ணன், பொரு ளாளர் பி.ஈஸ்வரன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர்.

சிஐடியு மாவட்டத் தலைவர் கே. மனோகரன், வடக்கு ஒருங்கிணைப் புக்குழு நிர்வாகி சு.நாராயணசாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.உஷா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இக்கூட்டத்தில், பெண் தொழி லாளர்களுக்கு 55 வயது முதல் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

நலவாரிய உறுப்பினர்க ளின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்.

திரு மண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரமும், இயற்கை மரண இறப்பு நிதியாக ரூ. 1 லட்சமும் வழங்க வேண்டும்.

நலவாரிய அலு வலகங்களில் நிலுவையிலுள்ள மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து, ஓய்வூதியம் மற்றும் உத வித்தொகை கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

தாமதம் இல்லாமல் மாதந்தோறும் ஓய்வூதி யம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, சங்கத்தின் கௌரவத் தலைவராக டி.வி.ரமணி, தலைவ ராக பி.ஈஸ்வரன், செயலாளராக பி. நவநீதகிருஷ்ணன், பொருளாள ராக சி.சந்திரா உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினார். சங்க துணைச் செயலாளர் சி.சுப்பிரமணி யம் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.