தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை அமல்படுத்துக! சிஐடியு சம்மேளனம் வலியுறுத்தல்!

20 Jun 2026, 10:17 pm
பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை அமல்படுத்துக!  சிஐடியு சம்மேளனம் வலியுறுத்தல்!

பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை அமல்படுத்துக! சிஐடியு சம்மேளனம் வலியுறுத்தல்!

கோயம்புத்தூர், ஜூன் 20- தமிழகத்தில் பஞ்சாலை தொழிலா ளர்களுக்கு உடனடியாகக் குறைந்தபட்ச கூலியைத் தீர்மானித்து அமல்படுத்த வேண்டும், கூட்டுறவு நூற்பாலைகளை முழுமையாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தீவிரப் பிரச்சார இயக்கம் நடத்துவது எனத் தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) முடிவு செய்துள்ளது. இச்சம்மேளனத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் கோயம்புத்தூரில் உள்ள கே.ரமணி நினைவகத்தில் மாநிலத் தலை வர் எம்.சந்திரன் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாநிலப் பொதுச்செய லாளர் எஸ்.கண்ணன், அகில இந்தியச் செயலாளர் ஆர்.கருமலையான், சம்மேள னப் பொதுச்செயலாளர் எம்.அசோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத் தில் பங்கேற்றனர்.

தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள்

பஞ்சாலைத் தொழிலாளர்களுக்குக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான கூலி உயர்வு வழங்கப்பட வில்லை என இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப் பட்டது. எனவே, அரசு உடனடியாகக் குறைந்தபட்ச கூலியைத் தீர்மானிப்ப தற்கான குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பெற்றுப் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலியை அமலாக்க வேண்டும் எனச் சம்மேளனம் வற்புறுத்தியுள்ளது

Hஊதியப் பாதுகாப்பு: அரசின் உத்தர வின்படி பயிற்சியாளர்களுக்குத் தினசரி ஊதியமாக 554 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ள நிலையில், அதற்கு குறையாத கூலியைப் பஞ்சாலைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கும் சம வேலைக்குச் சம சம்பளத்தை உறுதி செய்ய வேண்டும்.

Hசமூகப் பாதுகாப்பு: தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இஎஸ்ஐ, பிஎஃப் தொகைகளுக்கு உரிய ரசீதுக ளும், மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகளும் வழங்கப்பட வேண்டும்.

Hகூட்டுறவு நூற்பாலைகள்: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆலைக ளில் நடைபெற்றுள்ள ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் களைந்து, கூட்டுறவு ஆலைகளை முழுமையாக இயக்குவ தற்குத் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் தழுவிய அளவில் விரிவான பிரச்சார இயக்கங்களை முன்னெடுப்பது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.