தாயுமானவர் திட்ட ஊக்கத்தொகை உடனே வழங்க சிஐடியு கோரிக்கை
15 Mar 2026, 4:11 pm
<p><strong>தாயுமானவர் திட்ட ஊக்கத்தொகை உடனே வழங்க சிஐடியு கோரிக்கை</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 15- தாயுமானவர் திட்ட ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் (சிஐடியு) பல்லடம் கிளை நிர்வாகக்குழு கூட்டம் சனி யன்று, சிஐடியு பல்லடம் அலுவலகத்தில் வி.கருப்பு சாமி தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கெளதமன், மாவட்டப் பொரு ளாளர் பி.சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத் தில், பல்லடம் பகுதியில் தாயுமானவர் திட்டத்திற்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை, ஒரு கிளஸ்டர்க்கு ரூ.200 வீதம் (26.8.25) முதல் நாளது தேதி வரை சில கூட்டுறவு சங்கங்களில் நியாயவிலைக் கடை பணியா ளர்களுக்கு வழங்கவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஊதியத்தை (சரண் டர்) உடனடியாக வழங்க வேண்டும். அரசு அறிவித் துள்ள புதிய ஊதியம் வழங்குவதற்கு முன், நியாய விலைக்கடை பணியாளருக்கு வழங்க வேண்டிய தேர்வுநிலை சிறப்புநிலை சிறப்பு ஊதியம் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு முறையாக பணிக் கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத் தின் பல்லடம் தலைவராக வி.கருப்புசாமி, துணைத் தலைவராக எம்.கணேஷ்குமார், செயலாளராக பி. முருகன், துணைச்செயலாளராக டி.கார்திகேயன், பொருளாளராக பி.பாலமுருகன் மற்றும் 11 நிர் வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
