சம வேலைக்கு சம ஊதியம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்
27 Sept 2026, 11:42 pm

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

கோவை, செப்.27-சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதியாக அமல்படுத்த வேண்டும் என சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவலியுறுத்தியுள்ளது.கோவையில் சிஐடியு உழைக்

கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட பேரவைக் கூட்டம், ஞாயிறன்று பெரியநாயக்கன்பாளையம், கே.ஆர்மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.சத்யாதலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரேணுகாதேவி வரவேற்றார். சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.ஜடாஹெலன் துவக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி, மாவட்ட துணைத்தலைவர் என்.சிவராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில்,நிரந்தர தொழில்களில் ஒப்பந்த முறைக்கு முடிவு கட்ட வேண்டும். திட்டப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாதந்தோறும் ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதியாக அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும், நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும். பெண்கள் பணியாற்றும் இடங்களில் விசாகா குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து, மாவட்ட கன்வீனராக பி.சத்யா மற்றும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் ஆர்.ரேணுகாதேவி, வி.ரம்யா, ஆர்.கவிதா,இந்திராகாந்தி, என்.பிரேம்குமார், கே.ராஜாத்தி, காபிரா பானு பாஷா, செந்தாமரை, எம்.சந்திரகலா, ஆர்.ரேவதி, ராகவி உள்ளிட்ட 12 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், ஐசிடிஎஸ் நிர்வாகி ஆர்.கவிதா நன்றி கூறினார்.