தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையரிடம் சிஐடியு கோரிக்கை
30 Jun 2026, 12:57 am
<p><strong>தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையரிடம் சிஐடியு கோரிக்கை</strong></p><p>நாமக்கல், ஜூன் 29- தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியுவினர் தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சிறப்பு முகாம், டிசிஎம்எஸ் வளாகத் தில் திங்களன்று நடைபெற்றது. இதில் சிஐடியு நாமக்கல் மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி தலைமையில், மாவட்ட உதவித் தலைவர் எம்.செங்கோடன், மாவட்டக்குழு உறுப்பி னர் கந்தசாமி, டிசிஎம்எஸ் சங்க பொருளாளர் சந்திரமணி மற் றும் குருசாமி ஆகியோர் மண்டல அதிகாரியிடம் பல் வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். அந்த மனுவில், திருச்செங்கோடு டிசிஎம்எஸ் நிறுவனத் தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் தொகையை நிர்வாகம் உரிய முறையில் செலுத்தாமல் உள்ளது. தற்போது தொழிலாளர் களிடம் இபிஎப் தொகையை பிடித்தம் செய்ய மறுத்து வருகிறது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து தொழி லாளர்களின் வருங்கால வைப்பு நிதி உரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு இபிஎப் வசதி வழங்கா மல், சட்டப்படி கிடைக்க வேண்டிய சமூகப் பாதுகாப்பு உரிமைகள் மறுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிர்வாகங் கள் மீது நடவடிக்கை எடுத்து அனைத்து தொழிலா ளர்களுக்கும் இபிஎப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண் டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்களை பெற்றுக்கொண்ட தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி மண்டல அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு சட்டப்படி தேவை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக சிஐடியு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p>
