கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த சிஐடியு வலியுறுத்தல்
31 May 2026, 11:09 pm
<p><strong>கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த சிஐடியு வலியுறுத்தல்</strong></p><p>உடுமலை, மே 31- கட்டுமானப் பொருட்க ளின் விலை உயர்வை கட்டு படுத்த ஒன்றிய, மாநில அரசு கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு வலி யுறுத்தியுள்ளது. சிஐடியு கட்டிட கட்டு மானத் தொழிலாளர் சங்கத் தின் திருப்பூர் மாவட்டம், உடு மலை தாலுகா மாநாடு, உடுமலை ஸ்டாலின் நிலையத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. தாலுகா தலைவர் கனகராஜ் தலைமை வகித் தார். துணைச்செயலாளர் பாலு வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் பன்னீர்செல்வம் துவக்கவுரையாற்றினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் குமார், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இம்மாநாட்டில், தற் பொழுது கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதை, ஒன்றிய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். நலவாரி யத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை முழுமையாக உரிய நேரத்தில் வழங்க வேண் டும். இயற்கை மரணமடையும் தொழிலாளர் களுக்கு கிடைக்கும் உதவித்தொகையை ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டிட கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தின் நிதியை வேறு திட்டங் களுக்கு தருவதை தடுத்து, முழுமையாக நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும். ரூ.25 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள கட்டு மானங்களில் வேலை செய்யும் தொழிலாளர் களுக்கு விபத்து காப்பீடு செய்ய வேண்டும். தமிழக அரசு பொங்கல் திருவிழாவிற்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதனிடையே, நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, மாநாட்டில் பங்கேற்ற தோழர்கள் ரூ.3 ஆயிரம் நிதி வழங்கினர். இதைத்தொடர்ந்து, சங்கத்தின் உடுமலை தாலுகாக்குழு, உடுமலை நகரம் மற்றும் உடுமலை - குடிமங்கலம் ஒன்றியம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதில், உடுமலை - குடிமங்கலம் ஒன்றியக்குழு தலைவராக சிவசுப்பிரமணியம், செயலாள ராக ராஜேந்திரன் பொருளாராக பாலு, துணைத்தலைவர்களாக கனகராஜ், குருநா தன். துணைச்செயலாளர்களாக ஜெகதீசன், அய்யனார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். முடிவில், சங்கத்தின் பொருளாளர் கனக ராஜ் நன்று கூறினார்.</p>
