தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பேட்டா, இன்சென்டிவ் இழப்பை ஈடுகட்ட சிஐடியு கோரிக்கை!

4 Nov 2026, 9:05 pm
போக்குவரத்துத் தொழிலாளர்களின் பேட்டா, இன்சென்டிவ் இழப்பை ஈடுகட்ட சிஐடியு கோரிக்கை!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பேட்டா, இன்சென்டிவ் இழப்பை ஈடுகட்ட சிஐடியு கோரிக்கை!

சென்னை, நவ. 4 –மகளிர் கட்டணமில்லா ‘வெற்றிப் பயணத் திட்டத்தால்’ போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பேட்டா மற்றும் இன்சென்டிவ் குறைவை அரசு முழுமையாக ஈடுகட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்துச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே. ஆறுமுகநயினார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் விரிவுபடுத்தப்பட்டதால் தினசரி வசூல் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்துத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசூலுக்கு ஏற்றவாறு பேட்டா வழங்கும் நடைமுறை உள்ளது.

இழப்பீடு வழங்க அரசுக்கு வேண்டுகோள்சமீபத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு இரட்டிப்பு பேட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், சிஐடியு முன்வைத்த கோரிக்கைகள் முழுமையாகப் பரிசீலிக்கப்படவில்லை. மகளிர் பயணச் சீட்டு கணக்கீட்டின் அடிப்படையில் முழுமையான பேட்டாவை ஈடுகட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தொழில்நுட்பம் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஏற்படும் இன்சென்டிவ் குறைவையும் சரிசெய்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் எனச் சிஐடியு கேட்டுக்கொண்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.