அங்கன்வாடி ஊழியர்களை அவதூறாகப் பேசிய யூடியூபர்: அரசு நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்
13 Jul 2026, 10:04 pm
<p><strong>அங்கன்வாடி ஊழியர்களை அவதூறாகப் பேசிய யூடியூபர்: அரசு நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்</strong></p><p>சென்னை: அங்கன்வாடி ஊழியர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்ட யூடியூபர் மீது தமிழக அரசு உடனடியாகச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் மாநில அமைப்பாளர் எம்.தனலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில், ஊழியர்களும் உதவியாளர்களும் மிகக் குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் சிறப்பான செயல்பாடுகளால்தான் குழந்தை இறப்பு விகிதம் குறைந்து, போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது. அரசிற்கு நற்பெயரை ஈட்டித் தரும் இத்தகைய பெண் ஊழியர்களை அவதூறாகப் பேசிய யூடியூபர் மீது சமூக நலத்துறையும், தவெக அரசும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு என்ற தேர்தல் வாக்குறுதியோடு ஆட்சிக்கு வந்த அரசு, பெண் ஊழியர்கள் மனநிம்மதியுடனும் கௌரவத்துடனும் பணியாற்றப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p>
