அமெரிக்க அரசு 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க சிஐடியு கோரிக்கை
24 Jun 2026, 9:41 pm
<p><strong>அமெரிக்க அரசு 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க சிஐடியு கோரிக்கை</strong></p><p>தூத்துக்குடி, ஜுன் 24- சிஐடியு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாலுமி நிஷாந்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நிஷாந்த் குடும்பத்திற்கு சேர வேண்டிய இழப்பீடு குறித்து செலஸ்டியஸ் கப்பல் நிர்வாகம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இழப்பீடு குறித்து ஒன்றிய அரசும், கப்பல் துறை அமைச்ச கமும் உரிய தலையீடு செய்து நிவாரணம் கிடைக்கும் எற்பாடுகளை செய்ய வேண்டும் என்று நிஷாந்தின் மனைவி வேண்டுகொள் விடுத்துள்ளார். அமெரிக்க தாக்குதல் காரணமாக உயிரிழந்த 3 மாலுமிகள் மற்றும் நிஷாந்த் குடும்பத்தினர், சர்வதேச வணிக கப்பல்களின் அமைப்பு (International Maritime Organization), சர்வதேச தொழிலா ளர் மன்றம் (ILO), இன்டர்னேசனல் டிரான்ஸ்போர்ட் பெடரேசன் (ITF), சீமென் வெல்பேர் சொசைட்டி ஆகிய அமைப்புக ளின் பிரதிநிதிகள் மற்றும் மும்பையை தலை மையிடமாக கொண்ட டைரக்டர் ஜெனரல் ஷிப்பிங் ஆகியோர் பங்கேற்ற இணையவழி கலந்தாய்வு கூட்டம் பார்வேர்டு சீமேன் யூனியன் பொதுச்செயலாளர் மனோஜ் யாதவ் ஒருங்கிணைப்பில் ஜூன் 22 மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். நிராயுதபாணியான வணிக கப்பல் மாலுமிகள் கொல்லப்பட்ட அதிர்ச்சியை தெரிவித்துடன் மாலுமிகளின் பாதுகாப்பை உலக நாடுகள் உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்தனர். இழப்பீடு உள்ளிட்ட நிவாரணங்களை விரைந்து கிடைக்க நடவ டிக்கை எடுப்பதாக ஒன்றிய அரசின் டைரக்டர் ஜெனரல் ஷிப்பிங் உறுதி அளித்துள்ளார். உயிரிழந்த மாலுமிகள் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பார்வேர்டு சீமேன் யூனியன் தூத்துக்குடி கிளையும், சிஐடியு தொழிற்சங்கமும் வலியுறுத்துகிறது. நிஷாந்தின் மனைவியை ஒப்பந்த ஊழியராக பணியமர்த்தும் முடிவு பெரும் அதிர்ச்சி அளிக்க கூடியதும் நிராகரிக்கப்பட வேண்டியதுமாகும். நிஷாந்தின் மனைவி சரோபினுக்கு அரசு துறையில் தகுதிக்கேற்ப நிரந்தர பணி ஆணை வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் . இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>
