உடனடியாக 1000 டயர்களை கொள்முதல் செய்து அரசுப் பேருந்துகள் முடங்குவதை தவிர்த்திடுக! சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
9 Oct 2026, 8:49 pm

உடனடியாக 1000 டயர்களை கொள்முதல் செய்து அரசுப் பேருந்துகள் முடங்குவதை தவிர்த்திடுக! சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

நாகர்கோவில், அக்.9-உடனடியாக ஆயிரம் டயர்களைகொள்முதல் செய்து அரசுப் பேருந்துகள் முடங்குவதை தவிர்க்குமாறு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) மாநிலபொதுக்குழு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக ஊழியர் சங்க (சிஐடியு) மாநில பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் மாநில தலைவர் அருள்தாஸ் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டம் செண்பக ராமன் புதூரில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கனகராஜ், சிங்காரவேல் ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு) பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சம்மேளன பொதுச் செயலாளர்ஆறுமுகநயினார் நிறைவுரையாற்றி னார். உதவித் தலைவர் பெருமாள் நன்றி கூறினார்.மருத்துவக்காப்பீடு குளறுபடியை கண்டித்தும்,வாரிசு வேலை வழங்க வலியுறுத்தியும், ஓய்வு பெறும் தினத்திலேயே பண பலன்களை வழங்கக் கோரியும் மாநிலம் முழுவதும் மண்டலஅலுவலகம் முன்பு அக்டோபர் 23 ஆம் தேதி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் அரசு விரைவுபோக்குவரத்துக் கழகத்தில் பேருந்துபராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கான பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தனியார் பணியாளர்களை நியமிப்ப தைத் தவிர்த்து, உடனடியாக பரா

மரிப்புப் பணியாளர்களைப் போர்க்கால அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பராமரிப்புக்கு தேவையான உதிரிபாகங்கள், பேட்டரி போன்றவற்றை தேவையான அளவு உடனடியாக வாங்க வேண்டும், உடனடியாக 1000 டயர்கள் கொள்முதல் செய்து, பேருந்துகள் முடக்கத்தை தவிர்க்கவேண்டும்.பேருந்து கட்டமைப்பைத் தரம் உயர்த்த வேண்டும். காலிப்பணியிடங்களை இறந்துபோன தொழிலா ளர்களின் வாரிசுகளைக் கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.