ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.42 ஆயிரம் சம்பளம் வழங்கிடுக! சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளர் மாநாடு கோரிக்கை
11 Oct 2026, 10:14 pm

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.42 ஆயிரம் சம்பளம் வழங்கிடுக! சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளர் மாநாடு கோரிக்கை

நாகர்கோவில், அக்.11-அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.42 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்று சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளர் கோரிக்கை மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.கன்னியாகுமரி மாவட்ட சிஐடியு சார்பில் ஒப்பந்தத் தொழிலாளர் கோரிக்கை மாநாடு தக்கலையில் அக்டோபர் 11ஞாயிறன்று நடைபெற்றது. சிஐடியு மவட்ட செயலாளர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ் தலைமை வகித்தார்.

மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன், மாவட்ட தலைவர் ஏ.வி.பெல்லார்மின், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, மாநில நிர்வாகிகள், கே.தங்கமோகனன், எம்.ஐடா ஹெலன், பி.இந்திரா ஆகியோர் உரையாற்றினர்.

சம்பளத்துடன் வார விடுமுறை, சம வேலைக்கு சம ஊதியம், தேசிய மற்றும் பண்டிகை விடுமுறைகள் சம்பளத்துடன் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் சிறப்பு தற்செயல் விடுப்பு, பெண் தொழிலாளர்களுக்கு சுகாதாரமான கழிப்பறை, ஓய்வறை வசதிகள், குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டின் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.