முந்தய பக்கம்

தீபாவளி போனஸ் கோரி சிஐடியு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

25 Sept 2026, 9:59 pm
தீபாவளி போனஸ் கோரி சிஐடியு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>தீபாவளி போனஸ் கோரி சிஐடியு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருநெல்வேலி செப் 25-கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.5,000 வழங்க வேண்டும் . நிறுத்தப்பட்ட ஓய்வூதிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கட்டுமானத் தொழிலாளர் நலச்சங்கம் (சிஐடியு) சார்பில் நெல்லையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>பாளையங்கோட்டைநலவாரிய அலுவலகம் அமைந்துள்ள பெருமாள்புரம் திருமால்நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டதலைவர் ஆர்.முருகன், சிஐடியு மாவட்ட செயலாளர் எல்.சரவண பெருமாள், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.மோகன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜான் பாஸ்கர் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram