தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்து தொழிலாளர்களின் அரசியல் உரிமைகளைப் பறிப்பதா? கோவை மண்டல நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சிஐடியு கண்டனம்

8 Apr 2026, 5:30 am

சென்னை, ஏப். 7 - தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைமுறை விதிகளைக் காரணம் காட்டி, போக்குவரத்துத் தொழிலாளர்களின் அடிப்படை அரசியல் மற்றும் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் வகையில் கோவை மண்டல நிர்வாகம் எடுத்துள்ள அடக்குமுறை நடவடிக்கைகளை கைவிட சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோருக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கோவை மண்டல அரசுப் போக்குவரத்து கழகப் பொது மேலாளர், தொழிலாளர்கள் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என்று கூறி சில தொழிலாளர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளார். இந்த நடவடிக்கையானது இந்திய அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என சிஐடியு சுட்டிக் காட்டியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.