தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்திய அரசுக்கு சிஐடியு கண்டனம்
31 Dec 2025, 3:37 pm
<p><strong>தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்திய அரசுக்கு சிஐடியு கண்டனம்</strong></p>
<p>புதுச்சேரி, டிச.31- புதுச்சேரியில் முறையான விவாத மின்றி நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்திய என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு புதுச்சேரி மாநிலப் பொதுச் செயலாளர் சீனுவாசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில்: “ஒன்றிய பாஜக அரசு, தொழிலாளர்களின் நீண்டகாலப் போராட்டங்களின் பயனாகக் கிடைத்த 29 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாகச் சுருக்கி, நாடாளுமன்றத்தில் முறையான விவாதமின்றி நிறைவேற்றியது. இந்தச் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் உள்ளதாக இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் இதனை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன. புதுச்சேரியிலும் இச்சட்டங்களை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தித் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளன. கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் பேரணியின் முடிவில் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலரிடம் இது குறித்து மனுவும் அளிக்கப்பட்டது. இந்நிலை யில், தொழிலாளர்களின் கோரிக்கை களைப் புறந்தள்ளியும், சட்டமன்றத்தில் விவாதிக்காமலும், மாநில அரசு தன்னிச்சை யாக இச்சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இந்த ஜனநாயக விரோதப் போக்கை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. இதனை எதிர்த்து மற்ற தொழிற்சங்கங்க ளுடன் இணைந்து தீவிரப் போராட்டங் களை முன்னெடுப்போம்” எனத் தெரி வித்துள்ளார்.</p>
