தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேசிய சமூகப் பாதுகாப்பு வாரியங்களில் தொழிற்சங்கங்களைப் புறக்கணிப்பதா? சிஐடியு கடும் கண்டனம்!

yesterday
தேசிய சமூகப் பாதுகாப்பு வாரியங்களில் தொழிற்சங்கங்களைப் புறக்கணிப்பதா? சிஐடியு கடும் கண்டனம்!

தேசிய சமூகப் பாதுகாப்பு வாரியங்களில் தொழிற்சங்கங்களைப் புறக்கணிப்பதா?

சிஐடியு கடும் கண்டனம்!

சென்னை, நவ. 3 –முறைசாரா தொழிலாளர்கள், கிக் பணியாளர்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் பணியாளர்களுக்காக அமைக்கப்பட்ட தேசிய சமூகப் பாதுகாப்பு வாரியங்களில், அங்கீகரிக்கப்பட்ட மத்திய தொழிற்சங்கங்களைப் புறக்கணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை பாரபட்சமானது எனக் கூறிச் சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக மரபை சிதைக்கும் அரசுஇதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் வெளியிட்டுஉள்ள அறிக்கையில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு தனித்தனி தேசிய சமூகப் பாதுகாப்பு வாரியங்களில் சிஐடியு, ஐஎன்டியுசி,ஏஐடியுசி, ஏஐசிசிடியு, எல்பிஎப் மற்றும் சேவா போன்ற அங்கீகரிக்கப்பட்ட மத்திய தொழிற்சங்கங்களுக்கும், தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா போன்ற அதிக முறைசாரா தொழிலாளர்களைக் கொண்ட மாநில அரசுகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்காமல் ஆளும் கட்சி சார்ந்த அமைப்பினரைக் கொண்டு நிரப்புவது பாகுபாடான செயலாகும் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பூர்வமான முத்தரப்புக் கொள்கையைப் பின்பற்றுவது நிர்வாகத்தின் விருப்ப உரிமையல்ல; சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரநிலைகளின்படியும் நாடாளுமன்றச் சட்டத்தின்படியும் அது கட்டாயமாகும். தொழிற்சங்கங்களின் பலத்தைக் கண்டறியும் உறுப்பினர்சரிபார்ப்பு நடைமுறை நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், அரசின் இந்த நடவடிக்கை முத்தரப்புப் பங்கேற்பின் ஜனநாயக மரபையே முற்றிலுமாகச் சிதைத்துள்ளது.

எனவே, பாரபட்சமான தற்போதைய அறிவிப்பை உடனடியாக ரத்து செய்துவிட்டு, 2020 சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப்புகளிடமிருந்தும் புதிய நியமனங்களைப் பெற்று வாரியங்களை மறுசீரமைக்க வேண்டும் என சிஐடியுவலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.