முந்தய பக்கம்

போராட அனுமதி மறுக்கப்பட்டதற்கு  சிஐடியு கண்டன

28 Nov 2025, 2:28 pm
போராட அனுமதி மறுக்கப்பட்டதற்கு  சிஐடியு கண்டன
<p><strong>போராட அனுமதி மறுக்கப்பட்டதற்கு &nbsp;சிஐடியு கண்டனம்</strong></p> <p>திருவள்ளூர், நவ.28- திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான ஆஸ்திரேலிய லின்பாக்ஸ் நிறுவனம் மூடப்பட்டதால், நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். &nbsp;அவர்களுக்கு ஆதரவாக, சிஐடியு சார்பில் நவம்பர் 26 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக அனுமதி வழங்கியிருந்த காவல்துறை, நவ.25 இரவு, மருத்துவக் கல்லூரி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகிய காரணங்களைக் காட்டி திடீரென அனுமதியை ரத்து செய்தது. காவல்துறையின் இந்த அராஜகச் செயலை சிஐடியு வன்மையாகக் கண்டித்துள்ளது. டோல்கேட் பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்றும், நிறுவனங்களைப் பாது காக்கவே அனுமதி மறுக்கப்படுவதாகவும் சிஐடியு மாவட்டத் தலைவர் கே. விஜயன் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து, சிஐடியு மாவட்டத் தலைவர் கே. விஜயன், மாவட்டச் செயலாளர் ஏ.ஜி. சந்தானம், மாவட்டத் துணை நிர்வாகிகள் கே. ராஜேந்திரன், ஜி. வினாயகமூர்த்தி, நரேஷ்குமார், ரமேஷ்குமார், சங்கர் தாஸ், செந்தில்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலு வலக அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram