தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்து தொழிலாளர்களின் அரசியல் உரிமைகளைப் பறிப்பதா? கோவை மண்டல நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சிஐடியு கண்டனம்

8 Apr 2026, 5:30 am
போக்குவரத்து தொழிலாளர்களின் அரசியல் உரிமைகளைப் பறிப்பதா? கோவை மண்டல நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து தொழிலாளர்களின் அரசியல் உரிமையைப் பறிப்பதா? கோவை மண்டல நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சிஐடியு கண்டனம்

சென்னை, ஏப். 7 - தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபாதை விதிகளைக் காரணம் காட்டி, போக்குவரத்துத் தொழிலாளர்களின் அடிப்படை அரசியல் மற்றும் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் வகையில் போக்குவரத்துத் கழகத்தின் கோவை மண்டல நிர்வாகம் எடுத்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார், போக்குவரத்துத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோவை மண்டல அரசுப் போக்குவரத்து கழகப் பொது மேலாளர், தொழிலாளர்கள் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என்றும், வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் கூறிச் சில தொழிலாளர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளார். மேலும், அவர்கள் மீது குற்றச்சாட்டுகளையும் வழங்கப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.