குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி புதுச்சேரியில் சிஐடியு பிரச்சாரம்!
20 Jul 2026, 11:55 pm
<p><strong>குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி புதுச்சேரியில் சிஐடியு பிரச்சாரம்!</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 20– புதுச்சேரி சேதராப்பட்டு, ஏரிப்பாக்கம், கிருமாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளில் குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு கோரி போராடும் எம்.ஆர்.எஃப், மயிலம் இந்தியா, ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி தொழி லாளர்களிடம் தொழிற்சாலை நிர்வாக மும் தொழிலாளர் நலத்துறையும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை எதிரே நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்திற்குச் சிஐடியு மாநிலத் தலைவர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநிலச் செய லாளர் சீனுவாசன், நிர்வாகிகள் மதி வாணன், விஜயகுமார், மணிபாலன், பச்சையப்பன், லாவண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சின்னக்கடை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, லாஸ்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.</p>
