மறியலை விளக்கி சிஐடியு பிரச்சாரம்
9 Feb 2026, 3:02 pm
<p><strong>மறியலை விளக்கி சிஐடியு பிரச்சாரம்</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், பிப்.9- ஒன்றிய மோடி அரசு 29 தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, அவற்றை நான்கு தொகுப்பு சட்டங்களாக மாற்றி யதை கைவிட வலியுறுத்தியும், என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்கக் கோரியும், அரசு துறைகளில் உள்ள காலிப் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வலி யுறுத்தியும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும், மீண்டும் அவரது பெயரை சேர்க்க வலி யுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறஉள்ளது. இந்த போராட்டம் குறித்து பொதுமக்க ளுக்கு விளக்கி ஆதரவு திரட்டும் நோக்கில், சிஐடியு சார்பில் வத்திராயிருப்பு முத்தா லம்மன் சாவடியில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இந்த பிரச்சார இயக்கத்திற்கு முருகேசன் தலைமை தாங்கினார். இயக்கத்தை தொடங்கி வைத்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுந்தரபாண்டியன் பேசினார். விசைத்தறி தொழிலாளர் சம் மேளனத்தின் மாநிலத் தலைவர் சோமசுந்த ரம் விளக்கி பேசினார். பிரச்சாரத்தை நிறைவு செய்து தமிழ்நாடு சாலை போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் மாவ ட்டச் செயலாளர் திருமலை பேசினார். இந்த பிரச்சார இயக்கத்தில் சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜெயக் குமார், முத்துக்கருப்பன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் பெனரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் நகரில் தொழிற்சங் கங்கள் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக, மதுரை ராஜா கடை தெருவில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை இருபுறமும் உள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு, பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.</p>
