தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்மயமாக்குவதைக் கைவிடுக! சிஐடியு திருச்சி பெல் தொழிலாளர் சங்க மகாசபை தீர்மானம்!

19 Jul 2026, 9:08 pm
பொதுத்துறை நிறுவனங்களை  கார்ப்பரேட்மயமாக்குவதைக் கைவிடுக! சிஐடியு திருச்சி பெல் தொழிலாளர் சங்க மகாசபை தீர்மானம்!

பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்மயமாக்குவதைக் கைவிடுக! சிஐடியு திருச்சி பெல் தொழிலாளர் சங்க மகாசபை தீர்மானம்!

திருச்சிராப்பள்ளி, ஜூலை 19: திருச்சி பாரத மிகு மின் தொழிலாளர் சங்கத் தின் (சிஐடியு) ஆண்டு பொது மகாசபைக் கூட்டம், பெல் கம்யூனிட்டி ஹாலில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களைச் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கண்டித்துப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பங்குகளை விற்காதே!

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களின்படி, மத்திய, மாநில அரசுகள் மின் திட்டங்களை டெண்டர் இன்றி பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்.-க்கு (BHEL) நேரடி யாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும், புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்சி பெல் நிறுவனத்தில் புதிய நிரந்தரத் தொழிலாளர்களைப் பணி நியமனம் செய்வது, வெல்டர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவது, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மத்திய குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது மற்றும் சொசைட்டி தொழிலாளர்களை நீதிமன்றத் தீர்ப்பின்படி நிரந்தரப்படுத்துவது ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. விவ சாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து, விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு

கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எஸ்.ஸ்ரீதர், பொதுச் செயலாளராக ஆர்.பரமசிவம், செயலாளராக பி.கருப்பசாமி, பொருளாளராக வி.சேவியர்ராஜ், அமைப்புச் செயலாளராக ஏ.வான்மணி ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். துணைத் தலைவர்களாக கே.அருணன், யூ.பிரபு, கே.இசக்கிமுத்து, வி.பெரியசாமி, ஏ.சந்திரசேகர், எம்.மோகன்ராஜ், டி.பால முருகன், கே.ஞானசேகரன், எக்ஸ்.ஜார்ஜ் ஆரோக்கியராஜ், தினேஷ் பாபு மற்றும் 16 துணைச் செயலாளர்களும் தேர்வு செய்யப் பட்டனர்.

முன்னதாகச் செயலாளர் கே.இசக்கி முத்து வரவேற்புரை ஆற்ற, சிஐடியு அகில இந்தியச் செயலாளர் ஆர்.கருமலையான் சிறப்புரையாற்றினார். நிறைவாக அமைப்புச் செயலாளர் ஏ.வான்மணி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.