சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க புதிய கிளை தொடக்கம்
18 Jul 2026, 11:42 pm
<p><strong>சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க புதிய கிளை தொடக்கம்</strong></p><p>திருவள்ளூர், ஜூலை 18- திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில், போலிவாக்கம் கிராமத்தில் புதிய கிளை துவக்க விழா கடந்த ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்டச் செயலாளர் எம்.சந்திரசேகரன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். சங்கத்தின் சட்ட ஆலோசகர் டி.சுந்தரவடிவேல் மற்றும் மாவட்ட துணை பொதுச்செயலாளர் ஜி.சங்கர் தாஸ் ஆகியோர் இணைந்து புதிய கிளைக்கான பெயர் பலகையைத் திறந்து வைத்தனர். புதிய கிளையின் நிர்வாகிகளாகத் தலைவர் எம்.குமரவேல், செயலாளர் என்.வெங்கடேசன், பொருளாளர் ஜி.பூபாலன் ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்வில் சிஐடியு செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமா</p>
