முந்தய பக்கம்

ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.ராமு மறைவு

16 May 2026, 1:55 am
ஆட்டோ தொழிலாளர் சங்க  மாவட்ட தலைவர் எம்.ராமு மறைவு
<p><strong>ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.ராமு மறைவு</strong></p><p>வேலூர், மே 15 - வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) வேலூர்-திருப்பத்தூர் மாவட்டத் தலைவரும் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினரு மான தோழர் எம்.ராமு (வயது 66) கடந்த சில நாட்கள் உடல் நலிவுற்று இருந்தார். இந்நிலையில் வியாழனன்று (மே 14) கால மானார். அவருக்கு புஷ்பாவதி என்ற மனைவியும், தனசேகர் நவீன் என்ற இரு மகன்கள் உள்ளனர். அவருக்கு சிஐடியு வேலூர்-திருப்பத்தூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். பரசுராமன், தலைவர் டி.முரளி, மாவட்ட நிர்வாகிகள் மு.காசி, வி.நாகேந்திரன், ஏ.குப்பு, சி.சரவணன், ஏ.பழனியப்பன், விச மாவட்ட செயலாளர் சி.எஸ்.மகாலிங்கம், விதொச மாவட்ட செயலாளர் செ.ஏகலைவன் மற்றும் சிஐடியு, ஆட்டோ சங்க கிளை நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து வெள்ளியன்று காட்பாடி காங்கேயநல்லூர் பாலாற்றங்கரை யில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram