முந்தய பக்கம்

சிஐடியு ஆட்டோ சங்க புதிய கிளை தொடக்கம்

19 Jun 2026, 12:40 am
சிஐடியு ஆட்டோ சங்க  புதிய கிளை தொடக்கம்

சிஐடியு ஆட்டோ சங்க புதிய கிளை தொடக்கம்

சிதம்பரம், ஜூன் 18- சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை, அகரம் ரயிலடி பகுதியில் சிஐடியு ஆட்டோ சங்கத்தின் புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிஐடியு ஆட்டோ சங்க வட்டச் செயலாளர் விஜய் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு கலந்துகொண்டு, ஆட்டோ சங்கத்தின் பெயர் பலகையைத் திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வர்த்தக சங்கத் தலைவர் ஆனந்தன், பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மாரியப்பன், சரவணன், வி.சி.க நகர செயலாளர் அண்ணாமலை, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆழ்வார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் வேல்முருகன், மண்டல பொறுப்பாளர் அசன்முகமது, கட்டுமான சங்கத் தலைவர் தனசேகரன், ஆட்டோ சங்கப் பொருளாளர் மற்றும் நகரத் தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram