மக்களே தேடி மருத்துவ ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு முறையீடு
22 Dec 2025, 2:53 pm
<p><strong>மக்களே தேடி மருத்துவ ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு முறையீடு</strong></p>
<p>திருநெல்வேலி, டிச. 22- நெல்லை மாவட்டத்தில் மட்டுமே சுமார் 300-க்கும் மேற்பட்ட (WHV) தன் னார்வலர்கள் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணிபுரிகிறார்கள். இதில் தொற்றா நோய்கள் (NCD ) மட்டும் (இரத்த அழுத்த அளவு சர்க்கரை நோய் அளவு) கண்டறிய குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் தற்போது மக்களை தேடி மருத்துவம் தன்னார்வலர் என்ற பணி யையும் தாண்டி அதிகமான பணிச்சுமை தமிழக அரசு இந்த தொழிலாளர்கள் மீது திணிக்கிறது மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் அனைவரும் மருந்து மாத்திரைகளை பேருந்தில் எடுத்துச்செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் கிராமப்பகுதிகளுக்கு அதை சுமந்துக் கொண்டு நடந்து செல்ல முடியாது என்ற காரணத்தினால். அவர்க ளின் சொந்த இருசக்கர வாகனத்தையே பயன்படுத்துகிறார்கள் அவர்கள் பயன்படுத்தக்கூடிய இருசக்கர வாக னத்திற்கு தமிழக அரசாங்கம் எந்த உத வியும் செய்வதில்லை .படியும் கொடுப் பதில்லை. அவர்கள் சொந்தசெலவில் தான் பெட்ரோல் நிரப்ப வேண்டிய சூழல் இருக்கிறது. அரசு தரக்கூடிய 5,500 ரூபாயில் சரி பாதிக்கு மேல் பெட்ரோல்க்கு செலவு செய்யக்கூடிய நிலைமை தான் இவர்களுக்கு ஏற்படுகிறது ரூ 5,500/- மட்டுமே ஊதியம் பெறும் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் வாங்குகின்ற ஊதியத்தை அனைத்தை யும் செலவு செய்து விட்டு தங்களுடைய வாழ்க்கை நடத்தக்கூட வழி இல்லாமல் தவிக்கின்றனர். .இது ஒரு புறம் இருந்தா லும் சிலநாட்களுக்கு முன்பு புற்றுநோய் (CANCER), சிறுநீரக தொற்று (CKD) பாதம் பாதுகாப்பு (DIABETIC FOOT CARE), வழங்கி வந்த நிலையில் தற்போது தொற்றும் நோய்களையும் கண்டறிய சொல்கின்றனர். அதற்கான மாதிரிகளை ((Specimen) உதாரணமாக காச நோய்க்கான (TB)சளி) சேகரித்து வர சொல்கின்றனர். மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் தன்னார்வலர்கள் என்று பணியமர்த்தி விட்டு வெறும் 2 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்ற அடிப்படையாக வைத்துவிட்டு பத்து மணி நேர வேலை வாங்குவது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். ஆகையால் தமிழக அரசு உடன டியாக தலையிட்டு பணி சுமைக்கு ஏற்றாற்போல் மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை நிரந்தர அரசு ஊழியராக மாற்றிடவேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது அதன்பின் நடைபெற்ற கூட்டத்தில் செவ்வாயன்றுநடைபெறும் மாநிலம் தழுவிய சிஐடியு மறியல் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பது,மேலும் தமிழக அரசு உடனடியாக மக்களை தேடி மருத்துவ ஊழியரின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகின்ற 26 .12.2025 அன்று நெல்லை வண்ணா ரப்பேட்டையில் நிரந்தரப்படுத்த கோரி மிகப்பெரிய மறியல் போராட்டம் நடை பெறும் என முடிவு செய்யப்பட்டது இந்த நிகழ்வில் சிஐடியு மாவட்ட தலைவர் ஆர் முருகன், மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத் தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட செயலாளர் அன்ன லட்சுமி, மாவட்ட பொருளாளர் நளினி நாச்சியார் சீனித்தாய் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
