தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிஐடியு அம்பத்தூர் பகுதி தலைவர் தோழர் சு.பால்சாமி காலமானார் இன்று மருத்துவமனைக்கு உடல் தானம்!

7 Jun 2026, 1:36 am
சிஐடியு அம்பத்தூர் பகுதி தலைவர் தோழர் சு.பால்சாமி காலமானார்  இன்று  மருத்துவமனைக்கு  உடல்  தானம்!
<p><strong>சிஐடியு அம்பத்தூர் பகுதி தலைவர் தோழர் சு.பால்சாமி காலமானார் இன்று மருத்துவமனைக்கு உடல் தானம்!</strong></p><p>அம்பத்தூர், ஜூன் 6- சிஐடியு அம்பத்தூர் பகுதி தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான சு.பால்சாமி (74) உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை (ஜூன் 6) காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு தொழிலாளர்களும், இடதுசாரி இயக்கத்தினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ,வத்தலக்குண்டு ஆத்தூர் ரங்கராஜபுரத்தில் பிறந்த அவர், இளம் வயதிலேயே வாலிபர் சங்கத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து மக்கள் பணியைத் தொடங்கினார். பின்னர் சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் பணியில் சேர்ந்த அவர், அங்கேயும் கட்சிப் பணிகளைத் தொடர்ந்தார். பணி ஓய்வுக்குப் பின், அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் இன்ஜினியரிங் எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளராகவும் தலைவராகவும், சென்னை பெருநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் அம்பத்தூர் பகுதித் தலைவராகவும், சிஐடியு மாவட்ட துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து தொழிலாளர் வர்க்கத்திற்காகத் தீவிரமாகப் போராடினார். மேலும், கட்சியின் அம்பத்தூர் பகுதிச் செயலாளர், மாவட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் மற்றும் ஆவடி பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளில் இறுதி மூச்சு வரை மக்கள் சேவையாற்றினார். பாட்டாளி வர்க்கப் பார்வையால் தொழிலாளர்களைக் கவர்ந்த அவர், தொழிற்சாலை வாயில் கூட்டங்களில் அனல் பறக்கும் பேச்சாற்றல் கொண்டவர். அதே வேளையில், முகநூலில் கவிதை வாசிப்பு மூலம் இளம் படைப்பாளிகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்தார். அவரது இறுதி விருப்பப்படி தோழர் பால்சாமியின் உடல், ஞாயிறன்று (ஜூன் 7) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களின் பயன்பாட்டிற்காக தானமாக வழங்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.