தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

28 Feb 2026, 2:29 pm
திருச்சி விரைவு செய்திகள்

சிஐடியு அகில இந்திய மாநாட்டு முடிவுகள் விளக்க பேரவை

திருச்சிராப்பள்ளி, பிப்.28-  சிஐடியு அகில இந்திய மாநாட்டு முடிவுகள் விளக்க பேரவைக் கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். சிஐடியு அகில இந்திய மாநாட்டு முடிவுகள் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தொழிலாளர்களின் கடமை குறித்து சிஐடியு மாநிலச் செயலாளர் ஜானகிராமன் விளக்கவுரை ஆற்றினார். சிஐடியு மாநில, மாவட்ட முடிவுகள் குறித்து, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் பேசினார்.  இதில் மாநிலக்குழு உறுப்பினர் செல்வி, மாவட்டப் பொருளாளர் மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், டிஆர்இயு. திருச்சி கோட்ட செயலாளர் கரிகாலன், கோட்டத் தலைவர் லெனின், உதவி கோட்டச் செயலாளர் சங்கர், உதவி பொதுச் செயலாளர் பி.கே. மாதவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரத்ததான முகாம்

தென்காசி,பிப்.28- தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மருத்து வமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துலெட்சுமி தலைமை வகித்தார். கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பழனிக் குமார், மேற்பார்வையில் கல்லூரி மாணவ- மாணவியர்கள் பலர் ரத்த தானம் அளித்தனர்.

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இடம் வேண்டும் மார்ச் 12-இல் ஆட்சியரிடம்  தள்ளுவண்டி ஒப்படைக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.28-  சிஐடியு அகில இந்திய மாநாட்டு முடிவுகள் விளக்க பேரவை கூட்டம் சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் மணிமாறன் தலைமையில் வெண்மணி இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில், திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் 30 ஆண்டு காலமாக 70-க்கும் மேற்பட்டோர் தரைக்கடை தள்ளுவண்டியில் வியாபாரம் நடத்தி வந்தனர். இவர்கள், கடந்த 8 மாதங்களாக வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.  பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் கடை போட இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி திருச்சி ஆட்சியரிடம் தள்ளுவண்டிகளை ஒப்படைக்கும் போராட்டம் மார்ச் 12 ஆம் தேதி நடத்த வேண்டும். திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் ஏலம் விடும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். திருச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தை திறந்த வெளியாகவும், பொது இடமாகவும், பேருந்து நிலையமாகவே பயன்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.