தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் உழைக்கும் வர்க்கத்தின் கழுத்தைச் சுற்றும் தூக்குக் கயிறுகள்! நாடு தழுவிய போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், சிஐடியு அழைப்பு
10 May 2026, 8:54 pm

தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் உழைக்கும் வர்க்கத்தின் கழுத்தைச் சுற்றும் தூக்குக் கயிறுகள்! நாடு தழுவிய போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், சிஐடியு அழைப்பு

புதுதில்லி தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம், இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) அழைப்பு விடுத்துள்ளது.

போராட்டம்

பாஜக ஆளும் உத்தரப்பிர தேசத்தின் தலைநகரான லக்னோ வில் மே 9 அன்று தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் (சிஐ டியு) மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகளைச் சேர்ந்த ஆர்வ லர்கள், பொதுமக்கள் தெருக்களில் இறங்கி, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் ‘இறுதி விதிகள் அரசிதழ்’ (Final Rules Gazette) நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மாபெரும் போராட்டத்தில் மோடி அரசாங்கத் தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதி ராக வானதிர முழக்கங்களை எழுப் பிய தலைவர்கள், பொதுமக்க ளுக்கு தொழிலாளர்களுக்கு எதி ராக இழைக்கப்பட்ட துரோகத்தை கடுமையாகக் கண்டித்தனர்.

கார்ப்பரேட் சட்டங்கள் – அடிமைத்தனத்திற்கான வரைபடம்

இந்த போராட்டத்தின் போது அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் பொதுச் செயலா ளர் பி.வெங்கட், சிஐடியு தேசியச் செயலாளர் கே.என்.உமேஷ் பேசு கையில்,”புதிதாக அறிவிக்கப் பட்டுள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை “பாட்டாளி வர்க்கத்தின் குரலை நெரிக்க வடிவமைக்கப்பட்ட தூக்குக்கயிறு கள்” ஆகும். ஆளும் ஒன்றிய பாஜக ஆட்சி தனது கார்ப்பரேட் எஜமா னர்களுக்கு சேவை செய்வதற்காக முழுமையான வர்க்கப் போரைத் தொடங்கியுள்ளது. மோடி அரசு கொண்டு வந்தது தொழிலாளர் சட்டங்கள் அல்ல; கார்ப்பரேட் கோடீஸ்வரர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கொடிய விலங்குகள் போன்றது. 8 மணி நேர வேலை, குறைந்த பட்ச ஊதிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட போரா டிப் பெற்ற உரிமைகளைத் தூக்கி யெறிவதன் மூலம், இந்த அர சாங்கம் நம்மை மீண்டும் ஒரு வெட்க மற்ற அடிமைத்தன காலத்திற்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது. குறிப்பாக நமது தேசத்தின் உற் பத்தி சக்திகள் மீதான இந்த காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

கிராமப்புற ஏழைகள் மீதான தாக்குதல்

மில்லியன் கணக்கான மக்க ளின் வாழ்வாதாரமாக விளங்கும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முறையாகச் சிதைக்க மோடி அரசாங்கம் பெரிய முயற்சி மேற்கொண்டு வருகிறது. கிராமப்புற ஏழைகள் நிலம், ஊதி யம் மற்றும் கண்ணியத்திற்காகப் போராடும் போது, இந்த ஆட்சி அவர்களின் உயிர்வாழும் உரிமை யைப் பறிக்கிறது. உழைப்பவர் களையும் தொழிலாளர்களையும் வெளியேற்றத் துடிக்கும் ஒவ் வொரு சட்டமும் கடுமையான பதி லடியைச் சந்திக்கும்.

தவிர்க்க முடியாத கிளர்ச்சி

ஒடுக்குமுறை செய்பவர்கள் ஒருபோதும் உரிமைகளைத் தான மாக வழங்குவதில்லை; உரிமை கள் போராட்ட நெருப்பின் மூலமே கைப்பற்றப்படுகின்றன என்பதை வரலாறு நிரூபிக்கிறது. அந்த வர லாற்றுத் தருணம் மீண்டும் வந்து விட்டது. ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு தொழிற்சாலையும் எதிர்ப்பின் கோட்டையாக மாற வேண்டும். இந்த ‘கருப்புச் சட்டங் களை’ நாட்டின் மூலை முடுக் கெங்கும் எரிக்க வேண்டும்.

நாடளாவிய வர்க்கப் போராட்டத்திற்கான அறைகூவல்

லக்னோ, தில்லியில் நடக்கும் போராட்டங்கள் போன்று விரை வில் நாடு முழுவதும் வெடிக்கப் போகும் ஒரு பெரும் போராட்டத் தின் பொறி மட்டுமே. கன்னியா குமரி முதல் காஷ்மீர் வரை, கார்ப்ப ரேட்-மதவாத சக்திகளின் அசுத்த மான கூட்டணிக்கு எதிராக தொழி லாளர் வர்க்கம் ஒன்றிணைய வேண்டும். மோடி ஆட்சியின் முதன்மை நோக்கம் உழைப்பைச் சுரண்டுவது மட்டுமே. இந்தச் சுரண்டல் முறை தகர்க்கப்படும் வரை போராட்டம் ஓயாது.

நாம் இன்று எழுந்து நிற்கா விட்டால், நமது எதிர்காலம் அடி மைத்தனத்தின் இருளில் புதைக்கப் படும். உழைக்கும் மக்களே! உங்கள் கொடிகளை ஏந்தி வீதி களுக்கு அணிவகுத்து வாருங்கள். தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் ஒழிக! பாட்டாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக! கார்ப்ப ரேட்-மதவாத சுரண்டல் ஆட்சி ஒழிக!” போன்ற முழக்கத்துடன் உரையாற்றினர்.