முந்தய பக்கம்

மதுவா, நமசூத்ரா அகதிகளுக்கு குடியுரிமை

12 Apr 2026, 5:30 am
மதுவா, நமசூத்ரா அகதிகளுக்கு குடியுரிமை

மதுவா, நமசூத்ரா அகதிகளுக்கு குடியுரிமை

கொல்கத்தா - மேற்கு வங்க மாநிலம் புரியபதுவான் மாவட்டத்தில் உள்ள கட்கா பகுதியில் நடைபெற்ற பாஜகவின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "மதுவா மற்றும் நமசூத்ரா அகதி குடும்பங்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

நீங்கள் நாட்டின் அரசியலமைப்பின் பாதுகாப்பின் கீழ் இருக்கிறீர்கள். மதுவா, நமசூத்ரா மற்றும் அனைத்து அகதிகளும் குடியுரிமை பெறுவதற்காகவே இந்த மோடி அரசு சட்டத்தை இயற்றியுள்ளது. ஆனால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உங்களுக்குப் பயத்தைப் பரப்ப முயற்சிக்கின்றனர்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மதுவா மற்றும் நமசூத்ரா அகதி குடும்பங்களுக்கு குடியுரிமை வழங்கும் நடைமுறை துரிதப்படுத்தப்படும்" என அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram