தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“சினிமா பஞ்ச் டயலாக் எடுபடாது”  விஜய்யின் லாஜிக் இல்லாத அரசியல்!

4 Apr 2026, 4:02 pm
“சினிமா பஞ்ச் டயலாக் எடுபடாது”  விஜய்யின் லாஜிக் இல்லாத அரசியல்!
<p><strong>&ldquo;சினிமா பஞ்ச் டயலாக் எடுபடாது&rdquo; &nbsp;விஜய்யின் லாஜிக் இல்லாத அரசியல்!</strong></p> <p>திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், &ldquo;திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறது&rdquo; எனப் பேசியிருப்பது, &ldquo;மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது&rdquo;போல உள்ளது. தான் முதலமைச்சரானால் அனைவருக்கும் கார், பிறக்கும் குழந்தை களுக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் என விஜய் &nbsp;அள்ளி வீசிய வாக்குறுதிகளைக் கேட்டுத் தமிழ்நாடே சிரிக்கிறது. கணக்குத் தெரியாத &lsquo;தளபதி&rsquo; தமிழகத்தில் ஒரு நாளைக்குச் சராசரியாக 2,049 குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு பவுன் மோதிரம் வழங்க ஒரு நாளைக்கே அரசு கஜானாவிலிருந்து ₹25.6 கோடி செலவாகும். இந்த நிதியாதாரத்திற்கு வழியில்லாமல் விஜய் பேசும் &lsquo;தாய்மாமன் சீர்&rsquo; வெறும் சினிமா வசனமே. 2021 தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை (404 வாக்குறுதிகள்) திமுக நிறைவேற்றி யுள்ளதை ஊடகங்கள் மெய்ப்பித்துள்ளன. இதுகூடத் தெரியாமல் விஜய் பேசுவது அவரது அரசியல் அறியாமையைக் காட்டுகிறது. கல்லாப் பெட்டி அரசியலும் காவி நிழலும் பெற்ற பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒரு நபர், திமுக கூட்டணியைக் &lsquo;கல்லாப் பெட்டி கூட்டணி&rsquo; என விமர்சிப்பது அபத்தத்தின் உச்சம். பா.ஜ.க-வைப் பற்றியோ, ஒன்றிய அரசின் செயல்பாடுகள் பற்றியோ ஒரு வார்த்தை &nbsp;கூடப் பேசாத விஜய், மதச்சார்பற்ற கூட்டணியை &lsquo;பாதி காவி&rsquo; என்பது வேடிக்கையானது. தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் இணைந்து &nbsp;ஆட்சி அமைப்போம் என ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுவது, விஜய்யின் நிஜமான முகம் எதை நோக்கி இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது. சினிமாவில் வரும் &ldquo;பஞ்ச் டயலாக்&rdquo; நிஜ அரசியலில் ஒருபோதும் எடுபடாது. - கே.வி.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.