தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சியான் ஹெல்த்கேர் ஆலை தொழிலாளர்கள் தொடர் போராட்டம் “திவால் நிலைக்குப் பின் வெடித்த உரிமைக் குரல்”

14 Jun 2026, 10:37 pm
சியான் ஹெல்த்கேர் ஆலை தொழிலாளர்கள் தொடர் போராட்டம் “திவால் நிலைக்குப் பின் வெடித்த உரிமைக் குரல்”

வேலைநிறுத்தம் 60

ஹரித்துவார், ஜூன் 14 - “நான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ஆலையில்தான் வேலை செய்து வருகிறேன். புதிய நிர்வாகம் பொறுப் பேற்ற போது, பழைய நடைமுறைகள் அனைத்தும் அப்படியே தொடரும் என்று எங்களோடு பேசினார்கள். ஆனால், இப்போது எங்களின் ஆண்டு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யக் கோரி ஏப்ரல் 22-23 தேதிகளில் பேசச் சென்ற போது, எவ்வித உடன்பாடும் செய்ய முடியாது என்று நிர்வாகம் அப்பட்டமாக மறுத்துவிட்டது. எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றிவிட்டு ஆலையைத் தடையின்றி நடத்திக் கொள்ளுங்கள் என்று நாங்கள் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் எங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காக இந்தத் தர்ணா போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்” - உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் பகவான்பூரில் உள்ள ‘சியான் ஹெல்த்கேர்’ (Cian Healthcare) மருந்து உற்பத்தி ஆலை வாயிலில் திரண்ட தொழிலாளர்கள் ‘இன்குலாபி மஸ்தூர் கேந்திரா’ (Inqlabi Mazdoor Kendra) அமைப்பின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆவேசக் களப் பேட்டி இதுவாகும்.

திவால் நடவடிக்கைகள் மூலம் ஆலையைக் கைப்பற்றிய புதிய கார்ப்பரேட் நிர்வாகம், தொழி லாளர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பறித்து, வெறும் அடிமட்டக் கூலியை மட்டும் திணிக்க முயன்றதற்கு எதி ராக உழைக்கும் வர்க்கம் தொடுத்த விவேகமான போராட்டம் அப்பிராந்தி யத்தையே உலுக்கியுள்ளது.

கார்ப்பரேட் திவாலும் பழைய நிர்வாகத்தின் துரோகமும்

உலக சுகாதார அமைப்பின் தரச்சான்றிதழ் பெற்ற இந்த முன்னணி மருந்து ஆலையில் சுமார் 250 நிரந்தர ஊழியர்களும், உற்பத்தி மற்றும் பேக்கிங் பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரி கின்றனர். இவ்வாலையில் முறையான தொழிற்சங்கக் கட்டமைப்பு இல்லாத சூழலில், கடந்த 2021 முதல் 2024 வரை யிலான காலகட்டத்தில் கடுமையான நிதி நெருக்கடி காரணமாகச் சம்பளம் வழங்குவதில் பெரும் முறைகேடுகளும் தாமதமும் நிலவின.

இதனைத் தொடர்ந்து, ஆலை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (NCLT) கீழ் திவால் மற்றும் திவால் நிலை குறியீட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது, தொழிலாளர்கள் தங்களின் நிலுவைச் சம்பளம் மற்றும் பணிக்கொடையை மீட்கச் சட்டப்பூர்வமாகப் போராட வேண்டியிருந்தது. புதிய நிர்வாகம் ஆலையை மறுதொடக்கம் செய்ய வேண்டுமானால், தொழிலாளர்களின் நிலுவைத் தொகைகளை முதலில் தீர்க்க வேண்டும் என்ற அச்சுறுத்தலைத் தொழிலாளர்கள் விவேகத்துடன் பயன்படுத்தினர். இதன் காரணமாக, புதிய கார்ப்பரேட் தீர்வுத் திட்டத்தில் தொழிலாளர்களின் நிலுவைகளுக்கான நிதி பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு, புதிய மேலாண்மையின் கீழ் ஆலை இயங்கத் தொடங்கியது.

வாக்குறுதி மீறலும் துப்பாக்கி முனையிலான பாசிச மிரட்டல்களும்

பழைய நிர்வாகத்தின் கீழ் முறையான கூட்டுப் பேச்சுவார்த்தை உடன்பாடுகள் இல்லாவிட்டாலும், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு மற்றும் பணிச்சூழல் குறித்துத் தொழிலாளர்களுடன் நிர்வாகம் ‘மேனுவல் உடன்பாடுகளை’ எட்டி வந்தது. பிப்ரவரி 2026-ல் புதிய நிர்வாகமும் இத்தகைய ஆண்டு உடன்பாட்டைச் செய்வதாகப் பொய் வாக்குறுதி அளித்தது.

ஆனால், ஏப்ரல் தொடக்கத்தில் தொழி லாளர்கள் இது குறித்துக் கேள்வி எழுப்பிய போது, நிர்வாகம் தனது பாசிச முகத்தைக் காட்டியது. ஆலை வாயிலில் அமைதியான முறையில் கோரிக்கை களை முன்வைத்த தொழிலாளர்களை ஒடுக்க, துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டிய தாகவும், பழிவாங்கல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் களப் புகார்கள் எழுந்தன. அரசு நிர்ணயித்துள்ள அடிமட்டக் குறைந்தபட்ச ஊதியத்தைத் தவிர ஒரு பைசா கூட கூடுதலாகத் தர முடியாது என கார்ப்பரேட் நிர்வாகம் அராஜகம் செய்தது.

இதனை எதிர்த்து, ஏப்ரல் 22 முதல் ஆலை வாயிலில் தொழிலாளர்களின் பிரம்மாண்ட வாயில் தர்ணா போராட்டம் வெடித்தது. ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முழக்கங்களுடன் வெடித்த இப்போராட்டத்தில், மக்கள் இளைஞர் முன்னணி தேசியத்தலைவர் லலித் குமார் மற்றும் சிஐடியு உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளின் தோழர்கள் களமிறங்கி ஆதரவளித்தனர்.

சட்ட நுணுக்கங்களைக் கையாண்ட விவேகமான ‘இருப்புப் போராட்டம்’

ஆலையின் திவால் தீர்வு நட வடிக்கைகள் தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருந்ததால், தொழிலாளர்கள் உற்பத்தி யை முற்றிலும் முடக்கும் முழு வேலை நிறுத்தத்தில் இறங்கினால் அது ஆலை யின் புனரமைப்புச் செயல்முறையைப் பாதித்து தங்களின் வேலைவாய்ப்புக்கே ஆபத்தாக முடியும் என்பதை உணர்ந்தி ருந்தனர். எனவே, அவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கத்தியின் மேல் நடப்பதைப் போன்ற ஒரு விவேகமான உத்தியைக் கையாண்டனர்.

உற்பத்தியை முழுமையாக நிறுத்தா மல், தங்களின் ஷிப்ட் நேரங்களுக்கு வெளியே ஆலை வாயிலில் தினசரி அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தை நடத்தினர். ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே மாதத்தின் மூன்றாவது வாரம் வரை சுமார் 16 நாட்களுக்கும் மேலாக இந்த வாயில் தர்ணா வீரியத்துடன் நீடித்தது.

வென்றெடுக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வும் தொடரும் வர்க்கப் போராட்டமும்

தொழிலாளர்களின் இந்தத் தொடர் வாயில் முற்றுக்கைப் போராட்டத்தின் விளைவாகவும், பிராந்தியத்தில் நிலவிய தொழிலாளர் கொந்தளிப்பின் காரண மாகவும் உத்தராகண்ட் மாநில அரசு ஏப்ரல் 29 அன்று தொழிலாளர் களுக்கான திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன் மூலம், மாறுபடும் அகவிலைப்படி என்ற செயல்முறை யின் கீழ் அனைத்துப் பிரிவு தொழிலா ளர்களுக்கும் மாத ஊதியத்தில் ₹518 தன்னியல்பான உயர்வாகக் கிடைத்தது.

சியான் ஹெல்த்கேர் நிர்வாகம் அதுவரை இந்த அகவிலைப்படியை வழங்காமல் ஏமாற்றி வந்த நிலையில், தொழிலாளர்களின் இந்த 16 நாள் தொடர் தர்ணா போராட்டத்தின் அழுத்தத்தால், இந்த ₹518 ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.

தங்களின் முதன்மைக் கோரிக்கையான முறையான ‘ஆண்டு ஊதிய உடன்பாட்டை’ இன்னும் முழுமையாக வென்றெடுக்காவிட்டாலும், திவால் நிலைக்குப் பின்னரும் கார்ப்பரேட் அராஜகத்திற்குப் பணியாமல், சட்ட விதிகளின் நுணுக்கங்களை உணர்ந்து சியான் ஆலைத் தொழிலாளர்கள் நடத்திய இந்த விவேகமான வாயில் தர்ணா போராட்டம், உத்தராகண்ட் தொழில் வழித்தடத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைப் பிரகடனமாகத் திகழ்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.