குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை பக்கமிருந்து புதிய பாதுகாப்பான நடைபாதை அமைக்கத் திட்டம்!
18 Aug 2026, 12:48 am

குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை பக்கமிருந்து புதிய பாதுகாப்பான நடைபாதை அமைக்கத் திட்டம்!

சென்னை, ஆக. 17-ராதா நகர் சுரங்கப்பாதை பக்கத்திலிருந்து குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்குப் பாதுகாப்பான மற்றும் மாற்று நடைபாதை ஒன்றை அமைக்கத்தெற்கு ரயில்வேயும், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமமும் திட்டமிட்டுள்ளன. இப்பணி நிறைவடைந்ததும், ராதா நகர் பகுதியிலிருந்து ரயில் நிலையத்திற்கு வரும்பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் எளிதான நுழைவு மற்றும் வெளியேறும்வழிகள் கிடைக்கும்.

பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது ரயில் நிலையத்திலிருந்து 120 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுரங்கப்பாதையின் தொழில்நுட்ப அம்சங்களைக் கருத்தில்கொண்டு இந்த புதியவழி மேம்படுத்தப்படவுள்ளது.

ராதா நகர் சுரங்கப்பாதையின் இருபுறமும் நடைபாதைகள் இருந்தாலும்,அது நடைமேடை முனையிலிருந்து சுமார் 120 மீட்டர் தொலைவில் உள்ளதாலும், ரயில் மேடைகளுடன் நேரடி இணைப்பு இல்லாததாலும் பயணிகள் தண்டவாளங்களுக்கு இடையே நடந்துசெல்ல வேண்டியுள்ளது. இது பயணிகளுக்குக் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் செயல்பாட்டுக்கு உகந்ததல்ல என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு,சட்டத்திற்கமைய பரிசீலிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.