தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறித்தவர்கள் மானியம் பெற அழைப்பு

16 Nov 2025, 3:30 pm
ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட  கிறித்தவர்கள் மானியம் பெற அழைப்பு
<p><strong>ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட &nbsp;கிறித்தவர்கள் மானியம் பெற அழைப்பு</strong></p> <p>பெரம்பலூர், நவ.16- &nbsp; தமிழகத்தைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு, நபர் ஒருவருக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், நவ.1-க்குப் பிறகு ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. &nbsp;இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in &nbsp;என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்துடன் கடவுச்சீட்டு நகல் மற்றும் புனிதப் பயணத்தின் போது இஸ்ரேல்/ஜோர்டான்/எகிப்து குடியேற்று முத்திரைகள் பதிக்கப்பட்ட பக்கங்களின் நகல்கள். விசா நகல், இருப்பிடத்திலிருந்து புனிதப் பயணம் சென்று மீண்டும் இருப்பிடம் திரும்பிய வரை பயணித்த அனைத்து பயணசீட்டுகள், &nbsp;பேருந்து, ரயில், விமான பயணச்சீட்டுகள் மற்றும் விமான பயணங்களுக்கான Boarding Passes., புனிதப்பயணத் திட்டம். புனிதப்பயணம் நிறைவுச் சான்றிதழ் (படிவத்தில்), பயணம் மேற்கொண்ட அனைவரின் ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினரின் பாஸ்போர்ட் அளவு 3 புகைப்படங்கள்,வருமான சான்றிதழ், விண்ணப்பதாரர் கிறித்துவர்/கன்னியாஸ்திரி/அருட்சகோதரி என்பதற்கு ஆதாரமாக ஒரு சான்று இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 28.02.2026-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -600005, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.