தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்து ராஷ்டிரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாதாம்! ஒடிசாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

23 Dec 2025, 4:05 pm
இந்து ராஷ்டிரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாதாம்! ஒடிசாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்
<p><strong>இந்து ராஷ்டிரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாதாம்! ஒடிசாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்</strong></p> <p>புவனேஸ்வரம் பாஜக ஆளும் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தின் தெருக்களில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தொப்பிகள், நட்சத்தி ரங்கள் (ஸ்டார்ஸ்) மற்றும் பிற அலங்கா ரப் பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் கிறிஸ்தவப் பொருட்களை விற்ப னை செய்த புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர் மற்றும் நீங்கள் இந்துக்கள் தானா? என்று கேட்ட பின்பு, &ldquo;இது இந்து ராஷ்ட்ரம். கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது&rdquo; என்று கூறி தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ராஜஸ்தானில் இருந்து தாங்கள் பிழைப்பு நடத்த வந்ததாக புலம்பெயர் தொழிலாளர்கள் கூறிய பிறகும் &ldquo;இது இந்து ராஷ்ட்ரம்&rdquo; என தொ டர்ச்சியாக கூச்சலிட்டு இந்துத்துவா குண்டர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது &nbsp;தாக்குதல் நடத்தினர். மேலும் இனிமேல் இங்கு வியாபா ரம் செய்தால் கொன்று விடுவோம் என்றும் இந்துத்துவா குண்டர்கள் மிரட்டியுள்ளனர். இந்தியா ஒரு இந்து ராஷ்டிரம் என்றும், அதற்காக அரசியலமைப்பு சாசனத்தை திருத்த வேண்டிய தேவை எழவில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மை யில் தெரிவித்திருந்தார். இந்த பின்னணியில் &ldquo;இது இந்து ராஷ்ட்ரம்&rdquo; என்ற கூச்சலுடன் ஒடிசா வில் இந்த தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p>பாஜக ஆளும் உ.பி.,யில் கிறிஸ்துமஸ் விடுமுறை இல்லையாம்! உலகம் முழுவதும் டிச., 25 அன்று கிறிஸ்துமஸ் (இயேசு கிறிஸ்து பிறந்த நாள்) பண்டிகை கொண்டாடப்படுகிறது. மரபு காரணமாக இந்த பண்டிகைக்கு ஒன்றிய அரசு விடுமுறை அளிக்கிறது. அதே போல &ldquo;இந்தியா&rdquo; கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கிறிஸ்து மஸ் பண்டிகைக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநில அரசுகள் வகுப்புவாத கண்ணோட்டத்துடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை புறக்கணித்துள்ளன. கோரக்பூர் மடத்தின் சாமியாரான ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக அரசு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விடுமுறை இல்லை என அடாவடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், &ldquo;உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை நாள், விடுமுறை நாளாக இருக்காது. அன்றைய தினம் பள்ளிகளுக்கு வேலை நாளாக இருக்கும். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் நூற்றாண்டு தொடர்பான நிகழ்ச்சிகள் இந்த நாளில் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். டிச., 25 மாணவர்கள் வருகை கட்டாயம் வேண்டும்&rdquo; என்று சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டது. பாஜக ஆளும் மற்ற மாநில அரசுகள், உத்தரப்பிரதேச அரசு போல விடுமுறை இல்லை என்று பொது அறிவிப்பாக எதையும் வெளியிடவில்லை என்றாலும், ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வேலை நாளாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.