தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சித்தூர் - தச்சூர் 6 வழிச்சாலையில் சோதனை ஓட்டம் தொடக்கம்

13 May 2026, 11:40 pm
சித்தூர் - தச்சூர் 6 வழிச்சாலையில் சோதனை ஓட்டம் தொடக்கம்
<p><strong>சித்தூர் - தச்சூர் 6 வழிச்சாலையில் சோதனை ஓட்டம் தொடக்கம் </strong></p><p>திருவள்ளூர், மே 13- ஆந்திர மாநிலம் சித்தூர் முதல் திருவள்ளூர் மாவட்டம் தாச்சூர் வரையிலான 133 கிலோமீட்டர் நீள 6 வழிச்சாலையில், முதற்கட்டமாக 92 கிலோ மீட்டர் பணிகள் நிறைவடைந்து வாகன சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் 5,486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இந்தச் சாலை, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்குச் சரக்கு வாகனங்கள் விரை வாகச் செல்லப் பெரும் உதவியாக அமையும். தற்போது சித்தூர் முதல் ஊத்துக்கோட்டை அருகிலுள்ள போந்தவாக்கம் வரையிலான 92 கி.மீ தொலைவிற்குச் சாலைப் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. இந்தச் சாலையில் பாதுகாப்பு வசதிக்காக 24 மணி நேரமும் கண்காணிக்கும் 235 கேமராக்கள், அதிவேகத்தைக் கண்டறியும் கருவிகள் மற்றும் 86 இடங்களில் அவசர காலத் தொலைபேசிகள் நிறுவப்பட்டுள்ளன. பசுமைத் திட்டத்தின் கீழ் சாலையின் நடுவே 80 ஆயிரம் மரங்கள் நடப்பட்டு, சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்கும் சொட்டு நீர்ப்பாசன வசதியும் செய்யப்பட்டுள்ளது. இச்சாலையில் 24 பெரிய மேம்பாலங்கள் மற்றும் 17 சிறிய மேம்பாலங்கள் உட்படப் பல நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. பயணக் கட்டணமாகச் சித்தூர் முதல் தாச்சூர் வரை ஒருமுறை பயணிக்கக் கார்களுக்கு 285 ரூபாயும், தற்போது பயன்பாட்டிலுள்ள ஊத்துக்கோட்டை வரையிலான பகுதிக்கு 210 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் லாரிகளுக்கு 735 ரூபாய் முதல் கனரக வாகனங்களுக்கு 1,405 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. போந்தவாக்கம் முதல் தாச்சூர் வரையிலான மீதமுள்ள பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, சாலை முழுமை யாகப் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. அதே வேளையில், நீண்ட தூரம் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி உணவகங்கள், பெட்ரோல் பங்கு கள் மற்றும் கழிவறை வசதிகளைப் போதிய இடங்களில் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.