மக்களுக்கு நம்பிக்கை குறைந்தால் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல ஞானேஷ் குமாருக்கு எதிராக பாஜக கூட்டணிக் கட்சியும் கருத்து
25 Sept 2026, 9:17 pm

மக்களுக்கு நம்பிக்கை குறைந்தால் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல ஞானேஷ் குமாருக்கு எதிராக பாஜக கூட்டணிக் கட்சியும் கருத்து

புதுதில்லி, செப். 25-தலைமை தேர்தல்ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஒன்றிய அமைச்சரும் கருத்து தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றசெய்தியாளர்கள் சந்திப்பில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சிராக் பாஸ்வான்,“ஒன்றிய அமைச்சர் என்ற முறையில் அரசின் ஓர் அங்மாக நான் இருந்தாலும், ஒரு அரசியலமைப்பு நிறுவனமான தேர்தல் ஆணையத்தைஆதரித்துப் பேசும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளையில், அரசியல் ரீதியாக தங்களுக்குச் சாதமான நிலைப்பாட்டையே எப்போதும் எடுக்கும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும்குற்றச்சாட்டுக்கள் குறித்தும் நான் பெரிதாகக் கவலைப்பட வில்லை. எனினும், தேர்தல் நடைமுறையின் மீதுமக்களுக்கு நம்பிக்கை குறையத் தொடங்கினால் அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. எனவே, தேர்தல் ஆணையம்தனது விலக்கத்தை இன்னும் வலுவாக முன்வைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். மக்களின் மனதில் உள்ளஐயங்களை தேர்தல் அன்னியன் நிச்சயம் போக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.