சின்னவேடம்பட்டி ஏரிக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
17 Jul 2026, 11:32 pm

சின்னவேடம்பட்டி ஏரிக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

கோவை, ஜூலை 17 – சின்னவேடம்பட்டி ஏரிக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு பொருத்த மான மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாநகராட்சி மாமன்ற குழுத் தலைவர் ராமமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமை யில் நடைபெற்ற மாமன்ற உறுப்பி னர்களின் சாதாரண கூட்டத்தில், இக் கோரிக்கையை முன்வைத்து ராம மூர்த்தி பேசினார். அவர் பேசுகையில், “சின்னவேடம் பட்டி ஏரியானது மன்னர்கள் காலத் திலோ அல்லது ஆங்கிலேயர் காலத் திலோ உருவாக்கப்பட்டது அல்ல. சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சிபிஎம் மூத்த தலைவர் தோழர் ஆர்.வெங்கிடுவின் பெரும் முயற்சி யால், 1978 ஆம் ஆண்டு அன்றைய நீர்ப் பாசனத்துறை அமைச்சராக இருந்த குழந்தை வேலுவை அழைத்து வந்து, தற்போது குளம் அமைந்துள்ள நிலப் பரப்பை பார்வையிடச்செய்தார். பின்ன தொடர்ந்து சட்டப்பேரவையில் அழுத்த மாக வலியுறுத்தியதன் அடிப்படையில் இந்த சின்னவேடம்பட்டி குளம் உரு வாக அடித்தளம் இடப்பட்டது. இதற் கான ஒப்புதல் பெறப்பட்டது. இதன் பிறகு, 1982-ம் ஆண்டு விவசாயிகளிட மிருந்து சுமார் 220 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட குள மாகும். கணுவாய் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் தண்ணீரைத் திசை திருப்பி, கோவை கணபதி, சங்கனூர், புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளப் பாதிப் பில் இருந்து பாதுகாப்பதில் இந்த ஏரி முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க ஏரியையும் அதன் கரைகளையும் பாதுகாக்க வேண்டியது அவசியமா கும். தற்போது இந்த ஏரிக்கரையின் அரு கில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள் ளனர். இத்திட்டம் தேவையானது என் றாலும், சுத்திகரிப்பு நிலையம் அமைய வுள்ள தற்போதைய இடம் முற்றிலும் பொருத்தமற்றது. எனவே, இந்த இடத்தில் சுத்திக ரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என் பதில் அப்பகுதி பொதுமக்கள், விவ சாயிகள் மற்றும் சிபிஎம், காங்கிரஸ், கொமதேக, மதிமுக, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் கட்சிப் பாகுபாடின்றி ஒன்றாக இணைந்து எதிர்க்கிறோம். இதற்கு மாற்றாக, அதிகாரிகள் பரிசீலிப்பதற் காக 4 பொருத்தமான இடங்களைக் கள ஆய்வு செய்து நாங்கள் பரிந்துரைத் துள்ளோம். மாநகராட்சி ஆணையர், அமைச் சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகி யோர் இந்த வாழ்வாதார கோரிக்கை யின் தன்மையை உணர்ந்து, சுத்தி கரிப்பு நிலையத்தை ஏரிக்கரையில் அமைக்காமல், நாங்கள் குறிப்பிட்டுள்ள மாற்று இடங்களில் ஏதேனும் ஒன்றில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்,” என்று வலியுறுத்தினார். முன்னதாக, இக்கோரிக்கையை வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர் வி. இராமூர்த்தி தலைமையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் ஆர். பூபதி, எஸ்.சுமதி, கண்ணகி ஜோதிபாசு மற்றும் விவசாயிகள், அனைத்துக் கட்சி யினர் பதாகைகளை ஏந்தி மாநகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது.

மாமன்றத்தில் தள்ளுமுள்ளு: இடைநீக்க அறிவிப்பில் குழப்பம்

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், கூட்டம் தொடங்கியவுடன், மண் டல அலுவலகங்களில் நடைபெற்று வரும் மனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம்கள் குறித்து அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்று மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு கேள்வி எழுப்பினார். இதற்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்களும் ஆணையரிடம் விளக்கம் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் காங்கிரஸ் கவுன் சிலர் காயத்ரி உள்ளிட்ட உறுப்பினர்கள், செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகளில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, அதுகுறித்து மேயர் பதிலளிக்க வேண்டும் என்றும், முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என் றும் வலியுறுத்தினர். இதனால் காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதே நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாமன்ற அரங்கில் பல்வேறு தரப்பினர் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அமளி அடங்காததால் கூட்டத்தை ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைப்பதாக மேயர் ரங்கநாயகி அறிவித்தார். காலை சுமார் 11 மணியளவில், அவை ஒழுங்கை பாதித்ததாகக் கூறி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி, பூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சாந்தி, பிரபா ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி ஆகிய ஐந்து பேரை இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக மேயர் அறிவித்தார். ஆனால், கூட்டம் மீண்டும் 12 மணியளவில் தொடங்கிய போது, முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, காங் கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மட்டும் இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக மேயர் தெரிவித்தார்.