முந்தய பக்கம்

பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை

24 Jun 2026, 11:45 pm
பேரூராட்சியை நகராட்சியாக  தரம் உயர்த்த கோரிக்கை
<p><strong>பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை</strong></p><p> கள்ளக்குறிச்சி, ஜூன் 24- கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் பேரூராட்சியாகச் செயல்பட்டு வரும் சின்னசேலத்தை, நகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 18 வார்டுகளைக் கொண்ட சின்னசேலம் பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியின் ஆண்டு வரி வருவாய் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. மேலும், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், ரயில் நிலையம், 50-க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் எனச் சின்னசேலம் வேகமாக வளர்ந்து வரும் ஒரு வணிக நகரமாகத் திகழ்கிறது. இங்கு மக்கள் தொகை அதிகமாக இருந்தபோதிலும், இன்னமும் பேரூராட்சியாகவே நீடிப்பதால் போதிய நிதியின்றி குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இந்நகரம் நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டால், தொழில் மற்றும் கட்டமைப்பு ரீதியாகப் பெரும் வளர்ச்சி ஏற்படும் எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, சின்னசேலம் பேரூராட்சி தலைவர் (சேர்மன்) லாவண்யா ஜெய்கணேஷ், சம்பந்தப்பட்ட அமைச்சர் மூலமாக முதலமைச்சருக்குக் கோரிக்கை மனு அளித்துள்ளார். எனவே, சின்னசேலத்தை நகராட்சியாகத் தரம் உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டப் பொறுப்பு அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram