தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சின்னசேலம்-முங்கில்பாடி சாலையை விரைந்து அகலப்படுத்தக் கோரிக்கை

20 May 2026, 1:08 am
சின்னசேலம்-முங்கில்பாடி சாலையை விரைந்து  அகலப்படுத்தக் கோரிக்கை
<p><strong>சின்னசேலம்-முங்கில்பாடி சாலையை விரைந்து அகலப்படுத்தக் கோரிக்கை</strong></p><p>சின்னசேலம், மே 19 – சின்னசேலம் முங்கில்பாடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையை விரிவுபடுத்தி நெரிசலுக்கு தீர்வு காண சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பெரிய நகரமாகும். சேலம், பெங்களூரு, மூங்கில்பாடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் இங்கு இணைவதால் பேருந்து போக்கு வரத்து அதிகமாக உள்ளது. முங்கில்பாடி, ஏலவடி, பாண்டியன்குப்பம், நாகக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு செல்லும் முக்கிய சாலையாக முங்கில்பாடி சாலை உள்ளது. சின்னசேலம் பஸ் நிலையத்தில் துவங்கி புறவழிச்சாலை வழியே செல்லும் இச்சாலை, அண்ணா நகர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும்போது போக்கு வரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கிறது. ஆத்தூர் மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்து களும், கள்ளக்குறிச்சியில் இருந்து வரும் பேருந்துகளும் இச்சாலை வழியாகவே செல்வதால் நெரிசல் அதிகரிக்கிறது. மேலும், திருவண்ணாமலை, சங்கரா புரம், திருக்கோவிலூர், கச்சிராயபாளை யம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதி களுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இது விளங்குகிறது. இச்சாலையின் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சாலை குறுகலாக உள்ளது. சிலர் கடைகளின் முன்பு பொருட்களை வைத்தும், படிக்கட்டு கள் கட்டியும், மேற்கூரை அமைத்தும் ஆக்கிரமித்துள்ளனர். காலை, மாலை நேரங்களில் ஊர்ந்து செல்லக்கூட இடமில்லாத நிலை உள்ளது. சாலையோர வியாபாரிகள் சிலர் பொருட்களை ஏற்றி வாகனங்களை நிறுத்தி இறக்குவதாலும், ரயில்வே கேட் மூடப்படும்போது பேருந்துகள் வருவ தாலும் கடுமையான போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரி வித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சட்டமன்ற உறுப்பினர் இப்பிரச்சனையை கருத்தில் கொண்டு சாலையை இருபுறமும் அளந்து ஆக்கிர மிப்புகளை அகற்றி, சாலையை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.