தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சின்னசேலம் அருகே பேருந்து வழித்தடம் மாற்றத்திற்கு மாணவர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு

27 Jun 2026, 12:20 am
சின்னசேலம் அருகே பேருந்து வழித்தடம் மாற்றத்திற்கு மாணவர்கள், பொதுமக்கள்  எதிர்ப்பு

சின்னசேலம் அருகே பேருந்து வழித்தடம் மாற்றத்திற்கு மாணவர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு

சின்னசேலம், ஜூன் 26- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி. மாமாந்தூர் கிராமத்தில், அரசுப் பேருந்தின் வழித்தடம் மாற்றப்பட்டதைக் கண்டித்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வியாழனன்று (ஜூன் 25) பேருந்தைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழித்தடம் மாற்றத்தால் பாதிப்பு

சின்னசேலத்திலிருந்து பனையாந்தூர் வரை இயக்கப்பட்டு வந்த தடம் எண் 27 கொண்ட அரசு டவுன் பேருந்து, நயினார்பாளையம், கருந்தலாகுறிச்சி, வி. மாமாந்தூர் மற்றும் பனையாந்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் அன்றாடப் பயணத்திற்கு மிக முக்கிய ஆதாரமாக இருந்தது. இந்நிலையில், இப்பேருந்து பாத்திமா பாளையம் கிராமம் வரை செல்லும் வகை யில் அதன் வழித்தடம் மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தால், மெயின் ரோட்டிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரம் சுற்றிச் சென்று பேருந்து வருவதால், வி. மாமாந்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் உரிய நேரத்திற்குப் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். அதே போல், வேலைக்குச் செல்லும் ஊழி யர்களும் அலுவலகங்களுக்குச் செல்லக் காலதாமதம் ஏற்படும் நிலை உருவானது.

பேருந்தை சிறைபிடித்துப் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த வி. மாமாந்தூர் கிராம மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், நேற்று காலை 7.30 மணியளவில் தங்கள் பகுதி வழி யாக வந்த அரசுப் பேருந்தை வழி மறித்துச் சிறைபிடித்தனர். பழைய வழித்தடத்திலேயே பேருந்தை இயக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பித் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்க்குப்பம் காவல்துறை யினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை தரப்பில் உறுதி யளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காலை 9 மணியளவில் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். பழைய வழித்தடத்திலேயே பேருந்தை மீண்டும் இயக்கப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.