தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிடப்பில் போடப்பட்ட சின்னாறு அணை உபரிநீர் கால்வாய் பணி

26 Nov 2025, 4:29 pm
கிடப்பில் போடப்பட்ட சின்னாறு அணை உபரிநீர் கால்வாய் பணி
<p><strong>கிடப்பில் போடப்பட்ட சின்னாறு அணை உபரிநீர் கால்வாய் பணி</strong></p> <p>தருமபுரி, நவ.26- சின்னாறு அணையிலிருந்து 12 &nbsp;ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண் டும் என விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், சின்னாறு &nbsp;அணையிலிருந்து மழைக்காலங்க ளில் உபரிநீர் அதிகளவில், சின் னாறு வழியாக ஒகேனக்கல் காவிரி &nbsp;ஆற்றில் கலந்து வீணாக கடலில் &nbsp;கலந்து வருகிறது. இதைத்தடுக்க &nbsp;பாலக்கோடு, தருமபுரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் உள்ள ஏரிகளுக்கு கால்வாய் &nbsp;அமைத்து சின்னாற்றிலிருந்து உப ரிநீரை கொண்டு வர வேண்டும் என &nbsp;விவசாயிகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த சில &nbsp;ஆண்டுகளுக்கு முன்பு சின்னாற் றில் இருந்து ஜெர்தலாவ் கால் வாய் திட்டம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பாலக்கோடு, தரும புரி உட்பட பல ஏரிகளுக்கு கால் வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சின்னாறு அணை உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தை, மேலும் பல &nbsp;ஏரிகளுக்கு செயல்படுத்த வேண் டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நீர்வளத்துறை யினர் நபார்டு திட்டத்தின் கீழ் கடந்த &nbsp;2020 - 21 ஆம் ஆண்டில் 30 கோடியே &nbsp;37 லட்ச ரூபாய் மதிப்பில் சின்னாறு &nbsp;அணையில் இருந்து மழைக்கால உபரிநீரை ஜெர்தலாவ் கால்வா யில் 5 ஆவது கிலோ மீட்டரில் புதிய &nbsp;வழங்கு கால்வாய் அமைத்து, எர் றனஹள்ளி, புலிகரை ஏரி உட்பட 12 &nbsp;ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட் டத்தை செயல்படுத்த உத்தரவிட் டது. இப்பணி 2021 - 22 இல் &nbsp;தொடங்கப்பட்டது. தற்போது, இப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த கால்வாய் பிரச்சனைகளில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண அதிகாரிகள் நடவடிக் கை எடுக்காமல் உள்ளனர். இத னால் தமிழக அரசு கொண்டு வந்த &nbsp;புலிகரை, எர்றனஹள்ளி உள்ளிட்ட &nbsp;12 ஏரிகளை நேரடியாகவும் மறை முகமாகவும் நம்பியுள்ள விவசாயி கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன் &nbsp;கருதி கொண்டு வரப்பட்ட இத் திட்டப்பணியை விரைந்து முடித்து &nbsp;பயன்பாட்டிற்கு கொண்டு வர &nbsp;வேண்டும் என அப்பகுதி விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.