முந்தய பக்கம்

சின்னமுட்டம் தர்கா கந்தூரி விழா 3 மாவட்ட மக்கள் பங்கேற்பு

13 Aug 2026, 10:32 pm
சின்னமுட்டம் தர்கா கந்தூரி விழா 3 மாவட்ட மக்கள் பங்கேற்பு

சின்னமுட்டம் தர்கா கந்தூரி விழா 3 மாவட்ட மக்கள் பங்கேற்பு

நாகர்கோவில், ஆக.13-கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டத்தில் அமைந்துள்ள ஷேக் மஹும்மது ஒலியுல்லா தர்காவின் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.தர்கா டிரஸ்ட் தலைவர் அலி அக்பர் தலைமை வகித்தார். இமாம் தௌபீக் கொடியேற்றினார், நிர்வாகிகள்சுல்தான், அஷ்ரப், சாதிக் மற்றும் ஏராளமான இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து மௌலீது ஓதுதல் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள்நடைபெற்றன.

இதையடுத்து நடைபெற்ற சிறப்புபிரார்த்தனையில், உலக அமைதி நிலவவும், மக்களின் நல்வாழ்வு, ஒற்றுமை மற்றும் வளம் பெருகவும் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.கந்தூரி விழாவில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்டமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்களும், சாதி, மத வேறுபாடின்றி பல்வேறு தரப்பினரும் விழாவில் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram