தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்திய சின்னாளபட்டி பேரூராட்சிக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று

12 May 2026, 10:40 pm
திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்திய சின்னாளபட்டி பேரூராட்சிக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று
<p><strong>திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்திய சின்னாளபட்டி பேரூராட்சிக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று</strong></p><p>சின்னாளபட்டி, மே 12- சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரு வதற்காக பி.எம்.கியூ.ஆர் நிறுவனம் சார்பில் ஐ.எஸ்.ஓ. 9001:2015 தரச்சான்று வழங் கப்பட்டுள்ளது. இதற்காக பேரூராட்சி நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரி வித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத் தில் உள்ள 23 பேரூராட்சி களில் திடக்கழிவு மேலா ண்மையை சிறப்பாக செயல் படுத்தி வரும் பேரூராட்சி யாக சின்னாளபட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. செம்பட்டி சாலையில் அமைந்துள்ள வளமீட்பு பூங் காவில் தினசரி சுமார் 7.5 டன் மக்கும் மற்றும் மக்காத கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. மக்கும் கழிவுகள் இயற்கை உரம் மற்றும் மண் புழு உரமாக மாற்றப்பட்டு “செழிப்பு” என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகி றது. ஒரு டன் இயற்கை உரம் ரூ.3 ஆயிரத்துக்கும், ஒரு கிலோ உரம் ரூ.10-க்கும் விற் பனை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மக்காத கழிவுகளில் மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் உள்ளூர் வியா பாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. துணிக் கழிவுகள் கால்மிதியடி களாக தயாரிக்கப்பட்டு ரூ. 20-க்கு விற்பனை செய்யப் படுகின்றன. மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் மாதந்தோறும் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதுகுறித்து இளவரசி கூறுகையில், பொது சுகாதா ரத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டதற் கான அங்கீகாரமாக இந்த ஐ.எஸ்.ஓ தரச்சான்று கிடை த்துள்ளதாக தெரிவித்தார். மேலும், புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள், சுகாதார கழிவு கள் மற்றும் சிறப்பு கவன ஈர்ப்பு கழிவுகள் என நான்கு வகைகளாக பிரித்து சேக ரிக்கும் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருவதாகவும் கூறி னார். மேலும், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கழிவு களை கட்டாயம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டு வோருக்கு அபராதம் விதிக் கப்படும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த தரச்சான்று பெற காரணமான தலைமை எழுத் தர் முத்துராம். துப்புரவு அலு வலர் மணிகண்டன், எழுத் தர்கள் ராமமூர்த்தி, விவேக், துப்புரவு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகளுக்கு பேரூராட்சி நிர் வாகம் நன்றி தெரிவித்துள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.