தூய்மைப்பணியாளருக்கு பாராட்டு விழா
30 May 2026, 10:18 pm
<p><strong>தூய்மைப்பணியாளருக்கு பாராட்டு விழா</strong></p><p>சின்னாளப்பட்டி, மே 30- திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி சிறப்பு நிலைப் பேரூராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு பணியாளராக பணி யாற்றி வந்த நாகரத்தினம் (60) அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா சனிக்கிழமை பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நாகரத்தினம், சிபிஎம் மற்றும் சிஐடிய சார்பில் அறி விக்கப்பட்ட அனைத்து போராட்டங்களிலும் தொட ர்ந்து பங்கேற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை தாங்கினார். மன்றத் தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலை வர் ஆனந்தி பாரதிராஜா, தலைமை எழுத்தர் முத்து ராம், துப்புரவு அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் துப்பு ரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு ஒன்றிய கன்வீ னர் வி.கே.முருகன் மற்றும் நிர்வாகிகள் ரஜினி செல்வம், சக்திவேல், முருகேசன் ஆகி யோர், நாகரத்தினத்திற்கு நினைவுப் பரிசுகளை வழங்கி னர்.</p>
