சின்னாளபட்டியில் 40 சாயப்பட்டறைகள் மூடல்: 75 ஆண்டுகால பாரம்பரிய சுங்குடிச் சேலைத் தொழில் முடக்கம் ஆர். சச்சிதானந்தம் எம்.பி-யிடம் உற்பத்தியாளர்கள் முறையீடு!
1 hour before

சின்னாளபட்டியில் 40 சாயப்பட்டறைகள் மூடல்: 75 ஆண்டுகால பாரம்பரிய சுங்குடிச் சேலைத் தொழில் முடக்கம் ஆர். சச்சிதானந்தம் எம்.பி-யிடம் உற்பத்தியாளர்கள் முறையீடு!

திண்டுக்கல், ஜூலை 5- திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியில் மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தால் 40 சாயப் பட்டறைகள் இழுத்து மூடப்பட்ட தால், 75 ஆண்டுகால பாரம்பரிய மிக்க சுங்குடிச் சேலை உற்பத்தித் தொழில் முற்றிலும் முடங்கி யுள்ளது. இந்த எதிர்பாராத முடக் கத்தால் பல கோடி ரூபாய் மதிப் புள்ள ஜவுளிப் பொருட்கள் தேக்க மடைந்துள்ளன. மேலும், இத் தொழிலை நம்பியுள்ள 5,000 தொழி லாளர் குடும்பங்கள் நேரடியாக வும், லாரி, ஆட்டோ, விசைத்தறி உள்ளிட்ட துணைத் தொழில்க ளைச் சார்ந்த 10,000 குடும்பங்கள் மறைமுகமாகவும் வாழ்வாதா ரத்தை இழந்து தவிக்கின்றனர்.

இப்பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வலியுறுத்தி, சுங்குடிச் சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகச் சங்கங்களின் பிரதிநிதிகள் திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர். சச்சிதா னந்தம் எம்.பி-யைச் சிபிஎம் மாவட் டக் குழு அலுவலகத்தில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர்.

புவிசார் குறியீடு பெற்ற தொழிலுக்கு வந்த சோதனை

சின்னாளபட்டி என்றாலே நம் நினைவுக்கு வருவது பாரம்பரிய மிக்க சுங்குடிச் சேலைகள்தான். தூய பருத்திச் சேலைகளில் பல வண்ணங்களிலும், பிரத்தியேக வடிவமைப்புகளிலும் தயாரிக்கப் படும் இந்தச் சேலைகளுக்கு ஒன்றிய அரசு ‘புவிசார் குறியீடு’ (GI Tag) வழங்கி கௌரவித்துள் ளது. திண்டுக்கல் ரயில் நிலை யத்தில் கூட இந்தச் சேலைகளை விற்பனை செய்ய ரயில்வே நிர்வா கம் தனி அங்காடி அமைத்துக் கொடுத்துள்ளது.

திருப்பூர், சோமனூர் ஆகிய ஊர்களின் விசைத்தறிகளில் நெய் யப்படும் வெள்ளைச் சேலைகள் சின்னாளபட்டிக்குக் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள சாயப்பட்ட றைகள் மூலம் வண்ணமயமாக மெருகேற்றப்படுகின்றன. இங்கி ருந்து கேரளா ஓணம் பண்டிகைச் சேலைகள், தீபாவளிச் சேலைகள் பெருமளவில் உற்பத்தி செய்யப் படுவதுடன், இலங்கை, மலே சியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்கா சிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தகைய நற்சான்றிதழ் பெற்ற பாரம்பரி யத் தொழில், மாசுக்கட்டுப்பாடு என்ற பெயரில் முடக்கப்பட்டுள் ளது இப்பகுதி மக்களின் பொரு ளாதாரத்தை முற்றிலும் அழிக்கும் செயலாக மாறியுள்ளது.

முடங்கிய வாழ்வாதாரமும் தொழிலாளர்களின் அவலமும்

சின்னாளபட்டியில் உள்ள சாயப்பட்டறைகள் யாவும் பெரிய தொழிற்சாலைகள் அல்ல; சிறிய வீடுகளில் 5 முதல் 6 தொழிலா ளர்களைக் கொண்டு இயங்கும் குறு நிறுவனங்களாகும். கடந்த 50 நாட்களாக உற்பத்தி முடங்கி யுள்ளதால், தினசரி 10,000 சேலை கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சந்தையில் பெரும் பணமுடக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப் பட்டுள்ள மாதம் என்பதால், தொழி லாளர்கள் தங்களது பிள்ளைக ளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமலும், பள்ளி உப கரணங்கள் வாங்கித் தர முடி யாமலும் தவிக்கின்றனர். இத்தொ ழிலில் 75 விழுக்காடு பெண் தொழி லாளர்களே கஞ்சி போடுதல், பார்டர் கட்டுதல், முடிச்சுப் போடு தல், உலர்த்துதல் போன்ற பணி களில் ஈடுபட்டுள்ளனர். வேலை இழந்துள்ள இப்பெண்கள் சுய உதவிக் குழுக்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடி யாமல் தவித்து வருகின்றனர். இதனால் கந்துவட்டிக் கொடுமை களும் தலைதூக்கியுள்ளன. இவர்களை நம்பியிருந்த லாரி, ஆட்டோ தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

இந்த முடக்கத்தின் விளை வாக, திருப்பூர் மற்றும் சோமனூர் விசைத்தறிகளிலும் வெள்ளைச் சேலை உற்பத்தி நிறுத்தப்பட்டு, அங்குள்ள 3,000 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் தீபாவ ளிக்கான உற்பத்தியைத் தொ டங்க வேண்டியுள்ள சூழலில், மாவட்ட நிர்வாகமும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக ளும் இவர்களின் பிரச்சனை களைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்குடன் இருப்பது வேதனையளிப்பதாக உற்பத்தி யாளர்கள் சங்கப் பிரதிநிதிகளான ராஜபாண்டியன் மற்றும் புலவர் முத்து ஆகியோர் தெரிவித்தனர்.

பொதுச் சுத்திகரிப்பு நிலைய நெருக்கடி

இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. ஆசாத், மூத்த தோழர் வி.கே. முருகன், ஆத்தூர் ஒன்றியச் செயலாளர் சூசைமேரி ஆகியோர் கூறுகை யில், “சின்னாளபட்டி சாயப்பட்ட றைகளின் கழிவுநீர் திறந்தவெளியி லோ, ஆற்றுக்கோ அல்லது குளத் துக்கோ செல்வதில்லை. அவர்கள் தங்களது சொந்த சிமெண்ட் தொட் டிகளிலேயே சேமிக்கின்றனர். பொதுச் சுத்திகரிப்பு நிலையம் (CETP) அமைக்க அரசு 75 விழுக் காடு மானியம் தந்தாலும், மீத முள்ள 25 விழுக்காடு தொகையான ரூ. 20 கோடியைத் திரட்டுவது இச்சிறு உற்பத்தியாளர்களுக்குப் பெரும் சுமையாகும். தற்போது நிலம் மட்டுமே வாங்கப்பட்டுள் ளது. அரசே இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தை முழுமையாகக் கட்டிக் கொடுத்தால் மட்டுமே இத்தொழிலையும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும்” என்றனர்.

ஓராண்டு கால அவகாசம் வழங்குக: ஆர். சச்சிதானந்தம் எம்.பி. வலியுறுத்தல்

உற்பத்தியாளர்களின் மனு வைப் பெற்றுக்கொண்ட ஆர். சச்சி தானந்தம் எம்.பி., திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை அலைபேசியில் தொடர்புகொண்டு சுங்குடிச் சேலை உற்பத்தியாளர்களின் அவல நிலையை எடுத்துரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர். சச்சிதானந்தம் எம்.பி., “சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதலில் விவசாயிகளிடம் எதிர்ப்பு இருந்து, பின்னர் சமரசம் செய்யப்பட்டு தற்போது கட்டு மானப் பணிகள் தொடங்கி நடை பெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடையக் குறைந்தது ஓராண்டு காலம் ஆகும். எனவே, அதுவரை இப்பகுதி சாயப்பட்ட றைகள் இயங்குவதற்குக் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை கால அவகாசம் வழங்கி, பாரம்பரிய சுங்குடிச் சேலை உற்பத்தி மீண்டும் தொடர மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இக்கோரிக்கை மனு அளிப் பின் போது சின்னாளபட்டி காமன் எஃபுளயண்ட் டிரீட்மெண்ட் சிஸ்டம் சங்க நிர்வாகிகள் ஸ்ரீநிவா சன், நாகராஜ், காதர்மொய்தீன் ராஜா, திருமுருகன், நகர வர்த்த கர்கள் சங்க நிர்வாகிகள் தியாக ராஜன், ரெகுபதிபாண்டியன், பரணிதரன் மற்றும் சாயமேற்றுதல் நலச்சங்க நிர்வாகிகள் கமல ஹாசன், மகுடீஸ்வரன் உள்ளிட்ட பல தோழர்களும் திரளான தொ ழிலாளர்களும் உடனிருந்தனர்.